சமோசா பாயும் பையாவும்
தேரடி வீதியில் TVS XLலில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது எனது வலது புறத்திற்கு எதிரே கொஞ்சம் தூரத்தில்
இவர் வந்து கொண்டிருந்தார். சிறுவயதில் இருந்து பார்த்து. வருகிறேன் சட்டென ஒரு யோசனை, இவரை ஏன் ஒரு புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தோன்றியது. உடனே வண்டியை இடது பக்கம் ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, வண்டிக்கு பூட்டு போட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு சாலையை கடந்தேன். புகைப்படம் எடுப்பதை அவர் பார்த்து விட்டால் ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று தயங்கினேன். அதனால் பின் பக்கமாக இருந்து எடுக்கத் திட்டமிட்டேன். அவருக்குப் பின்னால் மூன்றடி இடைவெளி விட்டு பின்தொடர செய்ய ஆரம்பித்தேன்.
வேகமாக போனை அன்லாக் செய்து கேமராவை ஆன் செய்து பிரேமை வைத்தேன். அதே மூன்றடி இடைவெளியுடன் அவரின் வேகத்திற்கு இணையாக நடந்துகொண்டே ஒரு படம் எடுத்தேன். எடுக்கும்போதே தெரிந்தது, படம் சிறப்பாக அமையவில்லை. அடுத்த படத்திற்கு முயற்சி செய்து கொண்டிருந்த நொடி அவர் பூம்புகார் துணியகத்தை கடந்துக்கொண்டு இருந்தார். அந்நேரம் கடையில் இருந்து தாய்மார்கள் இருவர் வெளியே வந்துகொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவர் என்னை கவனித்துவிட்டார். தன்னுடன் இருப்பவரிடம் "சமோசா விக்கிறவர போட்டோ எடுக்கிறான் பாரு இந்த பையன்" அப்படின்னு சிரித்த முகத்துடன் வேடிக்கையாக சொன்னதை என்னால் கவனிக்க முடிந்தது. "ஆமாம்" என்பதுபோல மெல்லிய புன்னகையை அவருக்கு பதிலாக அளித்துவிட்டு என்னுடைய நோக்கத்தில் கவனத்தை செலுத்தினேன்.
அடுத்து ஒரு புகைப்படம் சரியான கோணத்தில் சரியான வெளிச்சத்தில் எடுத்தேன். நன்றாக வந்தது போலவே தெரிந்தது. புகைப்படம் எடுக்கும் முயற்சி வெற்றி அடைந்து விட்டதாக கருதி வண்டியை விட்ட இடத்தை நோக்கி ஓடினேன். வண்டியிடம் சென்ற பின்பு நிதானமாக எடுத்த படத்தை பார்த்தேன். படம் மிகச் சரியாக வந்திருந்தது. ஆனால் நடந்து கொண்டே படம் எடுத்ததால் கொஞ்சம் ஷேக் ஆகி இருந்தது. முயற்சி முழு பலனை எட்டவில்லை. கொஞ்சம் ஏமாற்றம். மீண்டும் அதே மாதிரி அவரை பின் தொடர்ந்து எடுக்கலாம், ஆனால் அடிக்கடி போக்குவரத்து காவல் துறையினர் ரோந்து வரும் சாலை என்பதால் அடுத்த முயற்சியை அப்படியே விட்டு விட்டேன்.
என்னுடைய பத்து வயதிலிருந்து இவரை பார்த்து வருகிறேன். ஒல்லியான தேகம், வெயிலில் காய்ந்த கருமை நிறத் தோல், ஒட்டிய கன்னங்கள், எண்ணெய் வடியும் முகம், தேங்காய் நார் போல நீண்ட தாடி, வெலுத்துப்போன உடை. தோலில் பெரிய அலுமினிய தாம்பாளத் தட்டு, அதில் கல்யாண சீர் வரிசையில் அடுக்கி வைத்தாற்போல் சமோசாக்கள்.
சமோசாக்களை மடித்து கொடுக்க
தட்டிற்கடியில் கொஞ்சம் செய்தித்தாள்கள்.
பெரும்பாலும் முழுக்கை சட்டையே அணிந்திருப்பார். இவர் காலணிகள் அணிந்து பார்த்ததில்லை. குதிகால் அருகிலிருக்கும் பேண்ட் துணி புலி கீறியதுபோல் தேய்ந்து இருக்கும். காலை 9 மணிக்கு சமோசா தட்டை தோளில் சுமந்துகொண்டு ஊரில் உள்ள பிரதான சாலை வழியாக "சமோசா...சமோசா..." எனக் கூவிக்கொண்டே விற்பனையை ஆரம்பித்துவிடுவார். மாலை வேளையில் பார்க்கும்போது முக்கால்வாசி தட்டு காலியாகி இருக்கும்.
பள்ளிக்கும் டியூசனுக்கு போகும் போது இவரை பார்ப்பதுண்டு. மாதத்தில் நான்கு முறையாவது பார்த்துவிடுவேன். பெரும்பாலும் கட்டபொம்மன் தெரு, சன்னதி தெரு, பைபாஸ் சாலை, முகல்புறா தெரு போன்ற பகுதிகளிலேயே அதிகம் பார்த்து இருக்கிறேன்.
ஒருமுறை டியூசனுக்கு கீழ்நாத்தூர் சாலை வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது பூட்டிய கடை முன் அமர்ந்து கொண்டு மீதமுள்ள சமோசாக்களை ஒரு பக்கமாக அடுக்கி கொண்டு இருந்தார். தலையில் ஒயர் கூடையுடன் நடந்து வந்த ஒரு கிராமத்துப் பெண் அவரை பார்த்ததும் தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த சுருக்கு பையிலிருந்து பத்து ரூபாய் கொடுத்து சமோசாக்களை வாங்கிக்கொண்டு சென்றார்.
இவரை அமர்ந்த நிலையிலும்,
விற்பனை செய்த காட்சியையும்
பார்த்தது அதுவே முதலும் கடைசி. இன்றுவரை அவர் வேகமாக நடந்து கொண்டு போகும் நிலையிலேயே தான் பார்த்து வருகிறேன்.
சரி இப்போது சமோசாவின் கதைக்கு வருவோம்.
இந்தியாவின் புவியியல் ரீதியாக சமோசாக்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று வடநாட்டு சமோசா, இன்னொன்று தென்னாட்டு சமோசா.
வடநாட்டு சமோசா அளவில் பெரியதாக இருக்கும். உருண்டைக்கு மூன்று மூக்கு வைத்தாற்போல் இருக்கும். உள்ளே பெரும்பாலும் உருளைக்கிழங்கு பட்டாணி மசாலாவே இருக்கும். கவனித்துப் பார்த்தால் அந்த வகை சமோசாவில் வெங்காயத்தையும் பூண்டையும் பார்க்கவே முடியாது. இந்திய மக்களில் சிலர் தங்கள் உணவில் வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்துக் கொள்வதில்லை. குறிப்பாக கிருஷ்ணரை வணங்குபவர்கள் அந்த கட்டுப்பாட்டை பின்பற்றுவது வழக்கம். ஒருவேளை இந்த சமோசாக்களை அவர்கள் உருவாக்கியதாக இருக்கலாம்.
பையா! தோ சமோசா.
திருவண்ணாமலை சன்னதி தெருவில் "ராஜம் மருத்துவமனைக்கு" அருகில் இந்த வகை சமோசா கடை பல வருடமாக இயங்கிவருகிறது. சமோசா மட்டுமல்லாமல் கச்சோரி, ஜிலேபி போன்ற பண்டங்களும் கிடைக்கும். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை கடை இயங்கும். தொன்னையில் ஒரு சமோசா/கச்சோரி வைத்து கட்டை விரலால் லேசாக அழுத்தி பச்சை சட்னி(காரச் சட்னி) சிவப்பு சட்னி(இனிப்பு சட்னி) போன்றவற்றை ஊற்றி தருவார் கடைக்காரர். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என கலந்து பேசும் அவரின் மென்மையான மொழி தனித்துவமாக இருக்கும். அவர் பயன்படுத்தும் வாக்கியங்கள்:
ஏக் சமோசா?
தோ சமோசா?
நாலா?
பாட்டி ரூபிஸ்!
சாப்பட அர் பார்சல்?
உரையாடலில் புரிதல் இல்லாமல் போகும் என்பதை உணர்ந்த அவர்
கூடுதல் பாதுகாப்பிற்காக எத்தனை சமோசா? எனக் கேட்கும்போதும், விலையை சொல்லும் போதும் விரலில் எண்ணிக்கையை காட்டுவார். இவரிடம் உடல் மொழியில் பேசும் போது நமக்குள் இருக்கும் ஆதி மனிதன் வெளிவருவதை நன்றாக உணர முடியும். இயக்குனர் லிங்குசாமி அவர்களின் இயக்கத்தில் தம்பி நடித்த படத்தின் தலைப்பையும் அண்ணன் நடித்த படத்தின் பிரபலமான பாடல் வரியையும் சேர்த்து "பையா! ஏக் கச்சோரி, பையா! தோ சமோசா" என நம்ம மக்களும் இவரிடம் ஹிந்தியில் பேசி கெத்து காட்டுவார்கள்.
இரண்டு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு சாப்பிட்டு இருக்கிறேன். இன்று ஒரு சமோசாவின் விலை பத்து ரூபாய். இன்றும் அந்த கடை அதே இடத்திற்கு சற்று அருகில் இயங்கி வருகிறது. வியாபாரம் செய்யும் அளவிற்கு தமிழையும் கற்றுக்கொண்டு இங்கேயே தங்கி விட்டார். அவர் இல்லாதபோது அவரின் உதவியாளர்கள் கடையை பார்த்து கொள்வார்கள். "சேட்டுக்கடை சமோசா" என்ற பெயரில் ஊர்மக்களிடத்தில் இந்த சமோசா மிகவும் பிரபலம். இந்த சமோசாவை சாப்பிடாதா நகர மக்கள் யாரும் இருக்க முடியாது.
அடுத்ததாக தென்னாட்டு சமோசாவை பற்றி பார்ப்போம். இந்த சமோசாவின் மசாலாவை விருப்பத்திற்கு ஏற்றவாறு கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கோஸ், பச்சை பட்டாணி, வெங்காயம் போன்றவற்றை வைத்து செய்வார்கள். மிகவும் அரிதாகவே அசைவ சமோசாகளை பார்க்க முடியும். ஒருமுறை தர்மபுரிக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த ஒரு கடையில் சாதா சமோசா 5 ரூபாய்க்கும் சிக்கன் சமோசா 20 ரூபாய்க்கும் விற்பதை பார்த்து இருக்கிறேன்.
சமோசாவுக்கு மாவு சரியான பதத்தில் இருக்க வேண்டும். இல்லையென்றால் அதிகமான எண்ணெய்யை குடித்து விடும். மசாலாவை சரியாக வைத்து மடித்து எண்ணெய்யில் போட வேண்டும். இல்லையென்றால் சமோசாவிற்குள் எண்ணெய் புகுந்துவிடும். சில நேரங்களில் எண்ணெய்யிலேயே சமோசா உடைந்து விடும். பொறுமையுடன் பக்குவமாக செய்தால் வெற்றி(சமோசா) நிச்சயம் கிட்டும்.
இவ்வாறு சமோசா செய்வதில் சில சவால்கள் இருக்கிறது. அதே போல் சமோசாவை வாங்குவதிலும் சில சவால்கள் இருக்கிறது. அந்த சவால்களை பின்வரும் இரண்டு சம்பவங்கள் மூலம் பார்ப்போம்.
1) நாவினால் சுட்ட வடு
வெளியூர் செல்வதற்காக பேருந்தில் காத்துக் கொண்டிருக்கும் போது பிஸ்கட், சிப்ஸ், சோளப்பொரி, சுண்டல் என வியாபாரிகள் பேருந்துக்குள் வந்த வண்ணமிருந்தனர். "சூடான சமோசா நாலு பத்து ரூபாய்" எனக் கூவிக்கொண்டு பேருந்துக்குள் ஒரு இளைஞர் ஏறினார். எனக்கு முன்னே அமர்ந்து இருந்த பெரியவர் தன் சட்டைப்பையில் இருந்து பத்து ரூபாய்யை தேடி எடுத்து சமோசா வாங்க காத்துக்கொண்டு இருந்தார்.
இவர் ரூபாய் எடுப்பதை கவனித்த வியாபாரி "சமோசா... சமோசா.." எனக் கூவிக்கொண்டே இவரை நோக்கி வந்தார். காசை கொடுத்து சமோசாவை
வாங்கியவர் அடுத்த நிமிடமே "என்னப்பா சூடே இல்லனு" கேட்டார். அதற்கு அந்த வியாபாரி "அவ்வளவுதாங்க சூடு வரும்" அப்படின்னு சொல்லிட்டு நகர்ந்தார். "நான் சூடே இல்லைனு சொல்றேன், நீ அவ்ளோ தான் சூடு வரும்னு சொல்ற"னு சொல்லி கோபமடைந்தார். "பின்ன நீங்க குடுக்குற காசுக்கு சட்டிலிருந்து அப்படியேவா எடுத்து வர முடியும்"னு அவர் பதில் சொல்ல இருவருக்கும் வாய்ச் சண்டை முற்றியது.
இறுதியில் வெளியில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த நடத்துனர் உள்ளே வந்து வியாபாரியை பேருந்தை விட்டு இறங்கச் சொல்லி சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தூக்கி எறிய மனமில்லாமல் சமோசாக்களை மடித்து தன் கைப்பையில் வைத்துக்கொண்டார்.
2) மைசூர் போண்டா
திரையரங்கில் இடைவேளையின் போது கேண்டீனுக்கு அருகே நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது என் செவி ஒரு பெண்ணின் குரலை கவனித்தது.
"இதுல வெறும் வெங்காயம் மட்டும் தான் இருக்கு"னு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கேன்டீன் ஊழியரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
அவர் கையில் பேப்பர் பிளேடில் இரண்டு சமோசாக்கள் இருந்தது. அதில் ஒன்று பிரித்து வைக்கப்பட்டு இருந்தது.
"எல்லா சமோசாவிலும் வெஜிடபிள் வராதுங்க, கலந்துதான் வரும்" எனச் சொல்லி சமாளிக்க முயற்சி செய்தார்.
கோபம் அடைந்த இவர் இன்னொரு சமோசாவையும் அவர் கண்முன்னே பிரித்து காண்பித்தார். ஆதாரம் இருமடங்காக வலு பெற்றது. அதிலும் வெறும் வெங்காயம் மட்டும்தான் இருந்தது.
"எங்கே? வெஜிடபிள் இல்ல, வெறும் வெங்காயம் மட்டும் தான் இருக்கு"னு கோபத்துடன் சொன்னார். "வெறும்" என்ற சொல்லில் அவருடைய ஆதங்கமும் ஆத்திரமும் வெளிப்பட்டது.
கேண்டீன் ஊழியர் மௌனமாக இருந்தார்
"இந்த மாதிரி ஏன் ஏமாத்தறீங்க! வெளிய வாங்கினா அஞ்சு ரூபா கூட ஆகாது, இத போய் பத்து ரூபாய்க்கு விக்குறீங்க. வெஜிடபிள் சமோசானு பில் போடுறீங்க, ஆனா சமோசால வெறும் வெங்காயம் மட்டும் தான் இருக்கு"னு சொல்லிவிட்டு விரக்தியுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார். மற்றவர்கள் யாரும் இந்த உரையாடலை கவனித்த மாதிரி தெரியவில்லை.
இந்த இரண்டு சம்பவங்களில் இருந்து நமக்கு சில கூற்றுகள் கிடைக்கிறது.
பிரச்சனையை எதிர்த்து ஒரே ஒரு குரல் மட்டும் இருந்ததால், அதற்கு அலட்சியமே பதிலாக கிடைக்கும்.
சூடான சமோசா என்று சொல்லி விற்பார்கள், அதில் சூடே இருக்காது. வெஜிடபிள் சமோசா என்று சொல்லி விற்பார்கள், அதில் வெஜிடபிளே இருக்காது. வெறும் வெங்காயம் மட்டும்தான் இருக்கும்.
இதுவும் ஒருவகையில் நுகர்வோரை ஏமாற்றும் செயலே. நம்மில் பலர் இதை கண்டுகொள்வதில்லை.
இது வழக்கமான ஒன்று தானே என நகர்ந்து விடுகிறோம்.
மிகவும் அரிதாகவே சூடான வெஜிடபிள் சமோசாவும் நியாயமும் கிடைக்கும்.
அசைவம் இஸ்லாமியர்களின் வாழ்வியலில் கலந்த ஒன்று என்பதை அனைவரும் அறிவர். எந்த ஊராக இருந்தாலும் அங்கு குறைந்தபட்சம் ஒரு இஸ்லாமியர்களின் அசைவ உணவகமாவது மக்களிடத்தில்
பிரபலமாக இருக்கும்.
உதாரணத்துக்கு பிரியாணி கடை அல்லது மாலை வேளையில் தள்ளுவண்டியில் விற்கப்படும் சிக்கன் 65, பீப் பகோடா, ஆட்டுக்கால் சூப் போன்ற கடைகள்.
அப்படி இருக்கையில் இவர் இந்த சைவ சமோசாவை தேர்ந்தெடுப்பதற்கு சில காரணங்கள் இருப்பதாக நம்புகிறேன்.
அப்பொழுது ரம்ஜான் நோன்பு நேரம். மாலை ஆறு மணி இருக்கும். கோழி கொக்கரக்கோனு...
இல்ல இது வேற கதை. மாலை ஆறு மணி வாக்கில் மண்டி தெரு வழியாக சென்று கொண்டிருக்கும் போது வழக்கத்திற்கு மாறாக மசூதிக்கு அருகே பல வடை, சமோசா கடைகள் முளைத்து இருந்தது. மசூதிக்கு முன்னால் எதற்காக இத்தனை கடைகள்? அதுவும் வடை, சமோசா கடை யாருக்காக? எனக் கேள்வி எழுந்தது.
மற்றொரு நாள் அதே ரமலான் நோன்பு காலத்தில் வழக்கமாக வடை, பஜ்ஜி வாங்கும் சன்னதி தெரு கற்பக விநாயகர் கோயிலுக்கு பக்கத்தில் இருக்கும் கடையில் வடை வாங்குவதற்காக காத்துக்கொண்டிருந்தேன். எனக்கு முன் காத்துக் கொண்டு இருந்த இஸ்லாமியர்கள் அதிகமாக மசால் வடைகளை வாங்கிச் சென்றனர். மாலையில் அவர்கள் பருகும் நோன்புக் கஞ்சியுடன் வடை, சமோசா போன்ற பதார்த்தங்களை சேர்த்து உண்பது வழக்கம் என அவர்கள் போனபின்பு அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். மசூதியின் முன் இருந்த கடைகளின் நோக்கமும் புரிந்தது. இப்படி நோன்பு நேரங்களில் உண்டு பழகிய சமோசா அவர்களுக்குப் பிடித்தமான ஒரு உணவாக மாறி இருக்கும் என நினைக்கிறேன்.
இப்போது சமோசா பாய் அவர்களின் கதைக்கு வருவோம். இவர் ஒரு நாளைக்கு எத்தனை சமோசாக்களை விற்கிறார்? இவ்வளவு சமோசாக்களை தயாரிக்க எவ்வளவு மணி நேரம் ஆகிறது? இவர் மட்டும்தான் தயாரிக்கிறாரா? இவருக்கு உதவியாளர் யாராவது இருக்கிறார்களா? ஒரு நாளைக்கு எவ்வளவு லாபம் வருகிறது? இவரின் பெயர் தான் என்ன?
இன்னும் இதுபோல் பல கேள்விகள் இவரைப் பார்க்கும் போதெல்லாம் எழும். ஆனால் இவரின் இறுக்கமான முகமும் என் தயக்க குணமும் இவரிடம் உரையாடலை ஏற்படுத்த முயற்சி செய்ததில்லை. பார்ப்போம்.
வெளிப்புற உணவுகளுக்கு எந்த மாதிரியான விமர்சனங்களை பொதுவாக வைக்கிறமோ, அதே விமர்சனம் இவருக்கும் பொருந்திப் போவது வருத்தத்திற்குரிய ஒன்று.
என்னுடைய வேண்டுகோள், தாம்பூலத் தட்டை வாழையிலை கொண்டோ அல்லது பருத்தித் துணியை கொண்டோ மூடி எடுத்துச் செல்லலாம்.
இவர் "அலுமினிய" தாம்பூலத் தட்டை பயன் படுத்துவதற்கு எளிமையான காரணம் ஒன்றும் இருக்கிறது. மற்ற உலோக தட்டை விடவும் அலுமினியம் எடையில் குறைவாக இருப்பதால் தான். எப்பொழுதும் தோளில் சமோசா தட்டை சுமந்த படி இருக்கும் இவரை ஒரே ஒரு முறை மட்டும் விற்றுத் தீர்ந்த தட்டுடன் கையை வீசி நடந்து செல்வதை பார்த்து இருக்கிறேன்.
சோன்பப்படி, பஞ்சுமிட்டாய், சேமியா ஐஸ், பாம்பே பாதாம் குல்பி போன்ற சில தனித்துவமான உணவு வியாபாரிகளை தெருவில் விற்பனை செய்வதை பார்த்தே வளர்ந்திருப்போம். அவர்களில் பலரை இப்போது பார்க்க முடிவதில்லை. ஒருவேளை அவர்களைப் எங்காவது பார்த்தால் "இவரை எத்தனை வருடமாக பார்த்து வருகிறேன் தெரியுமா!" என்று நினைப்பு நிச்சயம் அனைவருக்குள்ளேயும் வரும். அவர்களில் சிலர் தங்கள் வியாபாரத்தில் வெள்ளிவிழாவை கடந்தும் இருக்கலாம். ஒரு சிலரை மட்டும் திருவிழா நேரங்களில் பார்க்க முடிகிறது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம் இருக்கும். இந்த வியாபாரிகளுக்கு தினமும் ஒரே லட்சியம் தான் பிரதானமாக இருக்கும். தாங்கள் தயாரித்த உணவு பண்டங்களை எப்படியாவது முழுவதுமாக விற்று தீர்ப்பதே ஆகும்.
1st Photo:
13/01/2019
Moto E4 Plus
2nd Photo:
05/12/2011
Nokia Xpress Music
இதையும் பார்க்கலாமே:
Story of the Photo 02: School Memories
https://scienceplusmovies.blogspot.com/2020/04/school-memories.html?m=1
நான் சந்தித்த ரிச்சர்ட் பார்க்கர்!
https://scienceplusmovies.blogspot.com/2020/05/theatre-story-richard-parker.html?m=1

Comments
Post a Comment
Share your thoughts!