பலரின் சினிமா பார்வையையும் தேடலையும் தங்களின் காணொளிகளின் மூலம் விரிவடைய காரணமாக இருந்து வரும் "Missed Movies" YouTube சேனலிடம் இருந்து வெளிவந்திருக்கும் புத்தகமே "இன்டிபெண்டண்ட் சினிமா".
தயாரிப்பாளரை மட்டுமே சார்ந்து இருக்காமல் படைப்பாளியின் கையில் இருக்கும் பொருளாதாரம் மற்றும் நண்பர்கள், தெரிந்தவர்களின் பண உதவியுடன் எடுக்கப்படும் சினிமாவே இன்டிபெண்டண்ட் சினிமா (சுயாதீன திரைப்படம்). இயக்குனரிடம் தயாரிப்பாளர் கதையில் செய்யச் சொல்லும் ஜனரஞ்சக மற்றும் வணிக மாற்றங்களே இதற்கு காரணம்.
இந்த புத்தகம் சுயாதீன திரைப்படத்தின் தொடக்க காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை எப்படி இயங்கி வருகிறது என ஒரு தகவல் களஞ்சியமாக இருக்கிறது.
உலக சினிமா ஏன் பார்க்க வேண்டும்? என்ற விளக்கத்துடன் ஆரம்பமாகிறது இந்த புத்தகம். பிறகு சுயாதீன திரைப்படம் தொடங்கிய காலம், அதை முன்னெடுத்த இயக்குனர்கள் என
நாம் இதுவரை அறிந்திராத தகவல் மற்றும் சம்பவங்களுடன் நகர்கிறது.
கிட்டத்தட்ட சினிமா உலகில் நமக்கு மறைக்கப்பட்ட வரலாற்றை பிரம்பிப்புடன் படிப்பது போன்றதொரு உணர்வு.
நாம் இதுவரை அறிந்திராத தகவல் மற்றும் சம்பவங்களுடன் நகர்கிறது.
கிட்டத்தட்ட சினிமா உலகில் நமக்கு மறைக்கப்பட்ட வரலாற்றை பிரம்பிப்புடன் படிப்பது போன்றதொரு உணர்வு.
இந்த புத்தகத்தின் எழுத்தாளர் தனக்கு அறிமுகமான இயக்குனர்களும் அவர்கள் திரைப்படங்கள் தந்த தாக்கத்தை பகிரும் போது, வாசிப்பவர்களும் தங்களுக்கு அறிமுகமான உலக திரைப்படங்கள் தந்த தாக்கத்தை நினைவு கூற வழிவகுக்கிறது.
சுயாதீன இயக்குனர்கள் எடுத்த திரைப்படங்கள் பற்றிய அலசல், அந்த படங்கள் பெற்ற விருதுகள் என இதில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு சுயாதீன திரைப்படமும் நம்மை ஆச்சிரியப்படுத்துகிறது.
சுயாதீன இயக்குனர்கள் மேற்கொண்ட திட்டமிடல், உழைப்பு, விடாமுயற்சி, புதிய யுக்திகள் என அனைத்தும் புதிய படைப்பாளிகளுக்காக அவர்கள் போட்டுக் கொடுத்த பாதை.
மேலும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சுயாதீன திரைப்படம் எடுக்கும் வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கூடுதல் தகவல்கள் சிறப்பு.
என்னதான் இந்த புத்தகத்தின் எழுத்தாளர் "இது தன் முதல் புத்தகம், தவறுகள் இருந்தால் மன்னித்து மறந்துவிடுங்கள்" என முன்னுரையில் கேட்டுக்கொண்டாலும். புத்தகத்தில் இருக்கும் எழுத்து, நிறுத்தற்குறி (punctuation), வரி சீரமைப்பு (line alignment) பிழைகள் நம்மை அவ்வளவு பெரிய மணம் படைத்தவர்களாக இருக்க அனுமதிக்கவில்லை.
சில தவறுகள் இருந்தால் மன்னித்து விடலாம், பல தவறுகள் இருப்பின்?
பல இடங்களில் இந்த அச்சுப்பிழைகள் வாசிப்பின் ஓட்டத்திற்கு வேகத்தடையாக அமைந்து விடுகிறது.
பல இடங்களில் இந்த அச்சுப்பிழைகள் வாசிப்பின் ஓட்டத்திற்கு வேகத்தடையாக அமைந்து விடுகிறது.
Independent Cinema, Short Film போன்ற ஆங்கில சொற்களுக்கு "சுயாதீன திரைப்படம், குறும்படம்" என அழகான தமிழ் வார்த்தைகள் புழக்கத்தில் இருக்கும் போது "இன்டிபெண்டண்ட் சினிமா, ஷாட் பிலிம்" என்று புத்தகத்தில் பயன்படுத்தியதை தவிர்த்திருக்கலாம்.
இந்த புத்தகம் எளிமையாக அனைத்து தரப்பினரும் படிக்கும் வகையில் இருக்கிறது. இருப்பினும் "எழுத்து நடையில்" இன்னும் அழகியலை சேர்த்து இருக்கலாம்.
"இன்டிபெண்டண்ட் சினிமா" புத்தகம் - சினிமா ரசிகர்கள் வாசிக்க வேண்டிய வரலாற்று கையேடு.
எழுத்தாளர்: அப்துல் ரஹ்மான்
வெளியீடு: Missed Movies
விலை: ₹120
வெளியீடு: Missed Movies
விலை: ₹120
புத்தகத்தை வாங்க:
https://www.commonfolks.in/books/d/independent-cinema
https://www.commonfolks.in/books/d/independent-cinema
"Missed Movies" YouTube Channel:
https://youtu.be/vzPB9B1H_20
#independentcinema #bookreview #tamilbook
Comments
Post a Comment
Share your thoughts!