நான் சந்தித்த "ரிச்சர்ட் பார்க்கர்"!
"சூப்பர் டீலக்ஸ்" திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. பதினோராம் வகுப்பு படிக்கும் போது "ஆரணிய காண்டம்" படத்தை தனியாக சென்று பார்த்திருக்கிறேன். படத்தின் செய்தித்தாள் விளம்பரத்தில் தென்னங்கீற்று போல முத்திரை இருந்தது தான் ஒரே காரணம். என்னையும் சேர்த்து திரையரங்கில் மொத்தமே பத்து நபர்கள் தான் இருந்தார்கள். ரொம்பவும் வித்தியாசமான கேங்ஸ்டர் படம். பிடித்திருந்தது என்று சொல்வதைவிட புதுமையான அனுபவமாக இருந்தது எனச் சொல்லலாம். அந்த இயக்குனர் தன்னுடைய இரண்டாவது படத்தை பல வருட இடைவெளிக்குப் பிறகு எடுத்திருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
படத்திற்கு "A" சான்றிதழ் கொடுத்து இருந்தார்கள். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தது.
ஞாயிறு மதியம் 1:30 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினேன். நடக்க ஆரம்பித்தால் பத்து நிமிடத்தில் திரையரங்கை அடைந்து விடலாம். முன்பதிவு செய்யவில்லை. சக்தி திரையரங்கில் மொத்தம் மூன்று திறைகள் உள்ளது. சூப்பர் டீலக்ஸ் திரை 1ல் ஓடுகிறது, இருப்பதிலேயே மிகப் பெரிய திரை. டிக்கெட் கிடைக்கும், இருந்தாலும் முன்கூட்டியே சென்றுவிட்டேன். மீதி இருக்கும் இரண்டு திரையில் நயன்தாராவின் "ஐரா"வும், டிஸ்னியின் "டம்போ" என்ற ஆங்கில படமும் ஓடிக்கொண்டிருந்தது. 1:50க்கு கவுண்டரில் டிக்கெட்டை வாங்கிவிட்டு உள்ள சென்றேன். திரையரங்க ஊழியர் ஒருவர் "ஸ்கிரீன் 2, 3 மட்டும் உள்ளே வாங்க" என்று சத்தமாக அழைத்துக் கொண்டிருந்தார். வெகுசிலரே சென்றனர். மற்றவர்கள் அனைவரும் சூப்பர் டீலக்ஸ் தான் போல. திரையரங்கின் வலது புறத்திலே பெரும்பாலான மக்கள் நின்றுக் கொண்டு இருந்தனர். அங்கு தான் நிழலாக இருந்தது. அது பார்க்கிங்கிற்கு செல்லும் வழி. அந்த கூட்டத்தை கடந்து சென்று ஒரு ஓரமாக சுவருக்கு அருகே தரையில் அமர்ந்து விட்டேன். தரை சுத்தமாகவே இருந்தது. 2:30 மணிக்கு தான் படம். இன்னும் அரை மணி நேரம் இருக்கிறதே. அங்கு நின்றிருந்தவர்கள் என்னை போல் தரையில் அமர்வதை விரும்பவில்லை. சிலர் பைக்கில் சாய்ந்து நின்று கொண்டிருந்தனர்.
கால் மணி நேரத்திற்குப் பிறகு ஒருவர் கூட்டத்தை கடந்து என் பக்கத்தில் வந்து அமர்ந்தார். வயது 35 இருக்கும் இருக்கும். ஒல்லியான உடல்வாகு, கண்ணங்கள் ஒட்டி இருந்தது, என்னை போலவே பல் சற்று எடுப்பாக இருந்தது. நீலநிற பேண்டும் கட்டம் போட்ட சட்டையும் அணிந்திருந்தார். அவருடன் ஒரு சிறுமியும் சிறுவனும் இருந்தார்கள். இருவருக்கும் ஆறிலிருந்து எட்டு வயதிற்குள் இருக்கும். அந்த சிறுவன் அரை கால் டவுசரும் சட்டையும் அணிந்திருந்தான். அந்த சிறுமி கிளி பச்சை நிறத்தில் ப்ராக் அணிந்திருந்தாள். ரெட்டை குதிரைவால் சடை போட்டிருந்தாள். அவர்களின் அப்பாவைப் போலவே வெள்ளையாகவும், தோல் வரண்டும் காணப்பட்டனர். அந்த சிறுவன் தன் அப்பாவிற்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டு அப்பாவின் செல்போனை எடுத்து யூடுபில் எதாவது வைக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தான். அந்த சிறுமி இவர்களுக்கு எதிரில் அமர்ந்து கொண்டு, இவர்கள் யூடுப் பார்ப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள். கையில் வீட்டிலிருந்து எடுத்து வந்த ஒரு வாட்டர் பாட்டில் இருந்தது.
திடீரென எனக்கு ஒரு கேள்வி வந்தது, இவர்கள் எந்த படத்திற்கு வந்திருக்கிறார்கள்? இங்கு இருப்பவர்கள் அனைவரும் சூப்பர் டீலக்ஸ்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் இவர்களும் சூப்பர் டீலக்ஸ் படத்துக்குதான் வந்திருக்கிறார்களா? அப்படி இருக்கையில் இவருக்கு தெரியுமா இந்த படம் "A" சான்றிதழ் பெற்றது என்று. "ஹரஹர மஹாதேவகி" மற்றும் "இருட்டு அறையில் முரட்டு குத்து" போன்ற "A" சான்றிதழ் படங்களுக்கு தங்கள் குழந்தைகளுடன் பலர் படம் பார்த்தார்கள் என்று என் நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். வடசென்னை படத்திற்குக் கூட பெற்றோர்கள் தங்கள் மழலைகளை அழைத்து வந்ததை நானே நேரில் கண்டிருக்கிறேன். "A" சான்றிதழ் பெற்ற படத்திற்கு குழந்தைகளுக்கு எப்படி டிக்கெட் கொடுத்தார்கள். இப்படியான யோசனைகள் என் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. இறுதியாக அவரிடமே கேட்டு விடுவது என முடிவு செய்த நேரத்தில், அவரே "டிக்கெட் உள்ளேயே தருவாங்களா?" என என்னிடம் கேட்டார். இந்தத் திரையரங்கம் முழுவதுமாக புதுப்பித்து திறக்கப்பட்டு சில மாதங்கள் தான் ஆகிறது. அதனால் அவர் கேட்பதில் வியப்பொன்றும் இல்லை. "முன்னாடி இருக்கும் கவுண்டரிலேயே தருவாங்களே" என்று சொல்லிவிட்டு எந்த படத்துக்கு எனக் கேட்டேன். ஏனென்றால் சூப்பர் டீலக்ஸ் படம் ஹவுஸ்புல் கூட ஆகியிருக்கும், அந்த அளவுக்கு கூட்டம்.
அவர் "டம்போ" என்று சொன்னார். "இங்கு இருப்பவர்கள் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் டம்போவுக்கு டிக்கெட் வாங்கிட்டு நேராகவே உள்ளே செல்லலாம்" என்று சொன்னவுடன், "அச்சச்சோ! இவ்வளவு நேரம் வீணாக காத்துக்கொண்டு இருந்துவிட்டோமே" என வருத்தப்பட்டார். பிள்ளைகளை இங்கே இருக்கும்படி சொல்லிவிட்டு உடனே கூட்டத்திற்கு இடையே புகுந்து டிக்கெட் கொடுக்கும் கவுண்டரை நோக்கி வேகமாக சென்றார்.
அவர் டிக்கெட் வாங்கிவிட்டு திரும்பவும் கூட்டத்துக்குள் புகுந்து இங்கே தான் வரவேண்டும். படத்திற்கு மேலும் காலதாமதம் ஏற்படும் என்பதால் அவரின் பிள்ளைகளிடம் "வாங்க நம்ம முன்னாடி போய் நிற்போம், அப்பா டிக்கெட் வாங்கிட்டு வரும்போது அப்படியே உள்ளே போய் விடுங்கள்" எனச் சொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு முன்னே சென்றேன். கட்டிடத்திற்கு முன்னாடி வெயில் அடித்துக் கொண்டு இருந்ததால், அங்கு அந்த அளவுக்கு கூட்டம் இல்லை. திரையரங்கு ஊழியரும் "ஸ்கிரீன் 2, 3 மட்டும் வாங்கனு" இன்னும் சத்தமாக அழைத்துக் கொண்டே இருந்தார்.
இப்போது இவர்களுக்கு இரண்டு சவால்கள் காத்துக்கொண்டு இருக்கிறது. ஒன்று, டம்போ படத்திற்கான காட்சியின் நேரம் 2 மணியாக இருந்தால் இவர்கள் 20 நிமிட காட்சியை தவற விடுவார்கள். குறைந்தபட்சம் 2:15வது இருக்க வேண்டும். 2:30 காட்சியாக இருக்குமா எனத் தெரியவில்லை. டிக்கெட் வந்தால்தான் தெரியும். இரண்டாவது "ஸ்கிரீன் 1 வாங்கனு" சொல்லி விட்டால், இங்கு இருக்கும் அனைவரும் உள்ளே செல்ல ஆரம்பித்து விடுவார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில் இந்த சிறுவர்கள் படம் பார்க்கும் நேரம் இன்னும் தாமதமாகும்.
இவர்களின் தந்தை வேகமாக டிக்கெட்டை வாங்கிக்கொண்டு எங்களை நோக்கி வந்தார். அவரின் டிக்கெட்டை வாங்கி காட்சியின் நேரத்தை பார்த்தேன். அப்போது தான் நிம்மதி அடைந்தேன். காட்சியின் நேரம் 2:30. "முன்னாடி போங்க கேட்டா ஸ்கிரீன் இரண்டுனு சொல்லுங்க, விடுவாங்க" எனச் சொல்லி சீக்கிரம் போகச் சொன்னேன். இவர்கள் முன்னே சென்று படி ஏறிக்கொண்டு இருக்கும் போது அங்கிருந்த ஊழியர் இவர்களிடம் எந்த படம்னு கேட்டார், இவர் டிக்கெட்டை காண்பித்தார். போங்க போங்க என்று சொல்லி அனுப்பி விட்டார்.
நல்லவேளையாக ஸ்கிரீன் 1னை அழைப்பதற்குள் இவர்கள் உள்ளே சென்று விட்டார்கள். அடுத்தது மெட்டல் டிடெக்டர் சோதனை வாயிலை இவர்கள் நெருங்கினார்கள். அப்பொழுதுதான் அந்தக் குழந்தைகளின் தந்தை, உதவி செய்த எனக்கு நன்றி சொல்லவில்லையே எனத் தோன்றியது. அவர் படத்திற்கு செல்லும் பதற்றத்தில் மறந்து இருப்பார். அந்த சிறுவர்களை பார்த்தேன், இன்று அவர்கள் படம் பார்ப்பதற்கு வழிகாட்டியாக இருந்த இந்த அங்கிளுக்கு நன்றி சொல்லும் விதமாக என்னை "திரும்பி பார்ப்பார்கள்" அல்லது ஒரு "டாடா" காட்டுவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். அவர்களும் படம் பார்க்கும் அவசரத்தில் என்னை திரும்பி கூட பார்க்காமல் சென்று விட்டார்கள்.
இந்த இடத்தில் எனக்கு "லைப் ஆப் பை" திரைப்படத்தின் ஒரு காட்சி தான் நினைவுக்கு வந்தது. படம் பார்த்தவர்களுக்கு இந்நேரம் நான் எந்த காட்சியை நினைவு கூற இருக்கிறேன் என்பதை கணித்து இருப்பார்கள்.
சிறுவன் "பை பட்டேலும்", வங்கப்புலியான "ரிச்சர்ட் பார்க்கரும்" ஒரு சிறிய உயிர்காக்கும் படகில் பல நாட்கள் கடலில் பயணம் செய்து உயிர் பிழைக்க போராடி கொண்டிருப்பார்கள். பல போராட்டங்களை கடந்து
இறுதியாக மெக்சிகோ கடலின் கரை அருகே ஒதுங்குவார்கள். "பை பட்டேல்" நடக்க முடியாமல் அந்தக் கடலின் கரையில் அப்படியே விழுந்து விடுவான். அடுத்தாக, இவனை போலவே உடல் மெலிந்த அந்த "ரிச்சர்ட் பார்க்கர்" கடலின் கரையில், நடக்க முடியாமல் நடந்து காட்டை நோக்கிச் செல்லும். காடு ஆரம்பமாகும் எல்லையை நெருங்கியவுடன் சில நொடிகள் அப்படியே அமைதியாக நிற்கும். இத்தனை நாட்கள் ஒன்றாக பயணித்த தனக்கு விடை கொடுப்பது போல "திரும்பி பாரத்தோ" அல்லது "உறுமியோ" குட்பாய் சொல்லப்போகிறது என ஆவலாக காத்து இருப்பான் "பை பட்டேல்". ஆனால் அந்த பயங்கரமான வங்கப்புலி அப்படியே காட்டுக்குள் மறைந்து விடும்.
இந்தக் காட்சி ஒரு ஓவியத்தைப் போன்றதாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வையை தரும்.
இந்த மொத்த கதையையும் தன்னை சந்திக்க வந்த நண்பருடன் மனமுருகி விவரித்துக் கொண்டிருப்பார் "பை பட்டேல்".
அந்தப் புலியை ஒரு நண்பனைப் போல நேசித்தாகவும், தன்னை விட்டுப் பிரியும் போது ஒரு குட்பாய் கூட சொல்லவில்லையே என்று வருத்தப்படுவார். நமக்கு எவ்வளவோ நேரம் இருக்கிறது. ஆனால் பல நேரங்களில் நாம் நம் நெருங்கிய உறவை பிரியும்போது ஒரு குட்பாய் சொல்லக் கூட நேரம் எடுத்துக் கொள்வதில்லை என்று தன்னை நினைத்து வருத்தப்படுவார்.
இத்தனை காலம் உறுதுணையாக இருந்த உறவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குட்பாய் சொல்லி பிரியலாம். அல்லது குட்பாய் சொல்லி எதற்கு இந்த உறவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது அப்படியே தொடரட்டுமே என்றும் நினைக்கலாம். இந்த குட்பாய் விசயத்தில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். குட்பாய் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அந்த உறவு தரும் உணர்வும் அது தரும் நினைவுகளும் அப்படியே தொடர்வதை யாராலும் தடுக்க முடியாது. நமக்கு நெருக்கமானவர்களை முதன் முதலில் எந்த நாளில் சந்தித்தோம் என்பதை கூட நினைவில் இருந்து மீட்பது சிரமமாக இருக்கும். ஆனால் கடைசியாக சந்தித்த நாளில் அணிந்திருந்த உடையின் வண்ணம் வரை நினைவில் இருக்கும்.
"பை பட்டேலுக்கும்" சரி எனக்கும் சரி, திரும்பி பார்ப்பார்கள் என்று எதிர் பார்த்ததால் தான் ஏமாற்றம் அடைந்தோம். ஏமாற்றத்திற்கு எதிர்பார்ப்பே காரணம். அதன்பின் அந்த சிறுவர்களை இதுநாள் வரை சந்திக்கவில்லை. அவர்களின் அப்பாவை மட்டும் இரண்டு முறை கடைவீதியில் வண்டியில் போவதைப் பார்த்திருக்கிறேன்.
ஒருவேளை அந்த சிறுவர்களை சந்தித்தாலும் "இவர்களை சூப்பர் டீலக்ஸ் படத்தின் போது பார்த்தோம் தானே" என மனத்துக்குள் நினைத்துக் கொண்டு மெல்லிய புன்னகையுடன் கடந்து சென்று விடுவேன்.
அச்சமயம் "அந்த சிறுமி என்ன சடை போட்டு இருக்கிறாள்?" என்பதை மட்டும் கவனிக்க முயற்சிப்பேன்.
#lifeofpi #tiruvannamalaitheatre
See also:
கனவுகளின் விளக்கம் - புத்தக விமர்சனம்
https://scienceplusmovies.blogspot.com/2020/04/book-review-kanavugalin-vilakam.html?m=1

Comments
Post a Comment
Share your thoughts!