2018ல் நான் பார்த்த திரைப்படங்கள் ஒரு பார்வை.
நிமிர் - எதார்த்தமான கதையை அழகான கதாபாத்திரங்கள் மூலம் சொல்லப்பட்ட மலையாள மறு ஆக்கம். சில காட்சிகள் அழுத்தம் இல்லாமல் நகர்கிறது. படத்தின் நாயகனுக்கும் அவரின் தந்தைக்கும் நடக்கும் காட்சிகள் கவித்துவமானவை.
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் - நகைச்சுவை திரைப்படம் என்ற பெயரில் வந்து சிரிப்பை வரவைக்காத திரைப்படம்.
சவரக்கத்தி - நகைச்சுவை காட்சிக்குள் வாழ்க்கை தத்துவங்களை குறியீடாக வைத்து புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட திரைப்படம்.
கூட்டாளி - பணம் செலுத்தாதவர்களின் வண்டிகளை திருடும் நான்கு நண்பர்களைப் பற்றிய கதை.
சுமாராக எடுக்கப்பட்ட சிறு பட்ஜெட் திரைப்படம். படத்தின் கடைசி 30 நிமிடங்கள் அருமை.
நடிகையர் திலகம் - சாவித்திரி என்ற மகா நடிகையின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம். சமந்தா காட்சி பகுதிகளை தாராளமாக குறைத்திருக்கலாம். சாவித்திரி அவர்களை எண்ணி பிரமிப்பும் வருத்தமும் ஏற்ப்படுத்தி படம்.
இரும்புத் திரை - Cyber crime மற்றும் தொழில்நுட்ப வழி தகவல் திருட்டுகளை எளிதாக விளங்கிய படம். மக்கள் எந்த அளவுக்கு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பயமுறுத்திய மாஸ் திரைப்படம்.
கதாநாயகி - எதுக்கு?
ஒரு குப்பைக் கதை - நவீன "ரோசாப்பூ ரவிக்கைகாரி, எங்கேயோ கேட்ட குரல்". சமூகத்திற்கு தேவையான பாடம்.
காலா - தாராவி மற்றும் அதன் அரசியலை பேசிய மக்களுக்கான படம். வசனங்கள் சிறப்பு. திரைக்கதை ஒரு அமைப்பில் இல்லாததை தவிர்த்திருக்கலாம்.
விஸ்வரூபம் 2 - புத்திசாலித்தனமான முன் கதை, சுமாரான பின் கதை. இங்கிலாந்தில் நடக்கும் சம்பவங்கள் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். வித்தியாசமான இரண்டாம் பாகத்திரைப்படம்.
Alpha - 20,000 ஆண்டுகளுக்கு முன் வேட்டையாடி வாழ்ந்த ஒரு இனக்குழு தான் கதைக்களம். காட்சிகளால் பிரம்மிக்க வைத்தாலும் பலவீனமான திரைக்கதையால் அடுத்த என்ன என்பதை யுகீக்க முடிந்த சுமாரான படம்.
கோலமாவு கோகிலா - சில நகைச்சுவை காட்சிகளைத் தவிர மற்ற அனைத்துமே விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டிய நகைச்சுவை திரைப்படம்.
உதாரணம்: நயன்தாராவை வில்லன் வன்புணர்வு செய்ய முற்படும் காட்சியை யோகி பாபு அன்புதாசன் வசனங்களில் நகைச்சுவை காட்சியாக மாற்றியது கண்டிக்கத்தக்கது.
மேற்கு தொடர்ச்சி மலை - எதார்த்த மனிதர்களின் வாழ்க்கை. உலகமயமாதல் மற்றும் அரசியலால் பாதிக்கப்படும் நிலமற்ற உழைப்பாளிகளின் போராட்டப் பயணம்.
அண்ணனுக்கு ஜே - அட்டக்கத்தி தினகரன் கதாபாத்திரத்தின் நீட்சியே இந்த படத்தில் வரும் சேகர்(தினேஷ்) கதாபாத்திரம். அரசியலில் "சேகர்" எப்படி "மட்டை சேகராக" உருவாகிறார் என்பதை ஓரளவுக்கு சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் சொன்ன படம்.
சீமராஜா - தவறாக ஆங்கிலம் பேசினால் மக்கள் சிரிப்பார்கள் என்று தவறாக கணக்கு போட்டு எடுக்க பட்ட சுமாரான நகைச்சுவைத் திரைப்படம். வளரி பற்றிய செய்தியும் வரலாறு அருமை.
யுடர்ன் - இந்த படத்தின் இயக்குனர் தன் மகளை பள்ளியில் விடச் செல்லும் போது பார்த்த ஒரு சாலை விதி மீறலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கன்னட படத்தின் மறு ஆக்கம். பிரமாதமான mystery thriller திரைப்படம். Bilingual என்ற போர்வையில் வந்த தெலுங்கு டப்பிங் படம் என்பது மட்டுமே ஏமாற்றம்.
ராஜா ரங்குஸ்கி - குற்றவாளி யார் என்பதை இறுதிவரை யுகீக்க வைத்து, அதை முடிந்தவரை சுவாரஸ்யமாகவும் சொன்ன murder mystery திரைப்படம். கதாபாத்திரங்கள் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.
பரியேறும் பெருமாள் - தீவிரமான காட்சிகளுடன் சமூகத்தை பிரதிபலித்த உணர்வுகள் நிறைந்த படம்.
'96 - ஒவ்வொருவரின் கடந்த கால நினைவுகளை அசை போட வைத்த மிக நெருக்கமான படம்.
ராட்சசன் - திரையரங்க அனுபவம் என்றால் என்ன? என்பதை காட்டிய அருமையான psycho thriller படம். மென்மையான இசையும் திகிலாக இருப்பது புது அனுபவம். வில்லன் யார் என்று தெரிந்த பின்னும் கதை இழுத்துக்கொண்டு செல்வதை தவிர்த்திருக்கலாம்.
வடசென்னை - அழுத்தமான கதாபாத்திரங்கள், வித்தியாசமான கதை சொல்லலால் பிரம்மிப்பூட்டிய படம்.
கொச்சை வார்த்தைகளையும் வன்முறைகளையும் தவிர்த்திருக்கலாம்.
சர்க்கார் - பலவீனமான திரைக்கதை மற்றும் அழுத்தம் இல்லாத கதாபாத்திரங்களை கொண்டு எடுக்கப்பட்ட மாஸ் திரைப்படம்.
49 P என்ற தகவல் ஒன்று மட்டுமே ஆறுதல்.
2.0 - 450 கோடி ரூபாயில் வலுவான மாளிகையை பலவீனமான அடித்தளத்தில் எழுப்பியது ஏமாற்றம்.
சினிமா சுதந்திரத்தை அறிவியலுக்கும் பயன் படுத்தியதை தவிர்த்திருக்கலாம்.
படத்தின் 3D தொழில்நுட்பமும் காட்சி அமைப்புகளும் பாராட்ட வேண்டிய ஒன்று.
ஜானி - சுவாரஸ்யமான கதையை சுமாராக சொன்ன திரைப்படம். படத்தின் சில திருப்பங்கள் ரசிக்க வைக்கிறது.
Aquaman - அரியணைக்காக சண்டை போடும் அண்ணன் தம்பி கதை. நாம் கணித்த பாதையிலேயே கதை செல்வது சலிப்பு. கடலில் நடக்கும் திகிலான சண்டை காட்சி அருமை.
Aquamanனின் தந்தை தினமும் கடற்கரைக்கு வந்து நிற்பதும் அதற்கான காரணமும் கவித்துவமானது.
சீதக்காதி - கலை எப்படி கொல்லப்படுகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ள படம். இந்த திரைப்படம் கொல்லப்பட்டதும் அப்படியே.
சில இடங்களில் நம்பகத்தன்மை இல்லாதது குறையாக இருக்கிறது.
எதார்த்த கருத்துக்களை ஜனரஞ்சகமாகவும் கற்பனையுடனும் சொல்லப்பட்ட வித்தியாசமான படம்.
K. G. F. Chapter 1 - பார்த்த கதைதான் என்றாலும் அதை வழங்கிய விதத்தில் ரசிக்க முடிகிறது. Non-linear திரைக்கதை அமைப்பும் வசனங்களும் அருமை.
அதீத built-upகளையும் வன்முறைகளையும் தவிர்த்திருக்கலாம்.
கனா - பெண்கள் கிரிக்கட் மற்றும் விவசாயத்தில் இருக்கும் சவால்களை சுவாரஸ்யமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்த படம். பிரச்சார வசனங்களை இன்னும் இயல்பாக சொல்லி இருக்கலாம்.
மற்றப்படி அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் நல்ல படம்.

Comments
Post a Comment
Share your thoughts!