"சமைக்கலாம் வாங்க" 4.0 பஜ்ஜி தேவையான பொருட்கள்: 1) வெங்காயம் - 4 2) உருளைக்கிழங்கு - 2 3) கேரட் -1 4) கொத்தமல்லி ஒரு கொத்து *மிளகாய்த்தூள், உப்பு - ருசிக்கேற்ப செய்முறை: ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், உருளைக்கிழங்கு, துருவிய கேரட் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ஐந்து தேக்கரண்டி கல்ல மாவு, ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள், 3/4 தேக்கரண்டி உப்பு, கொஞ்சம் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் தெளித்து கலக்கவும். 15 நிமிடத்திற்கு அப்படியே விடவும். காரணம்: வெங்காயத்தில் இருக்கும் தண்ணீர் வெளியேறும். கலவை சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும். கெட்டியாக இருந்தால் தண்ணீரும் தண்ணீயாக இருந்தால் கல்ல மாவையும் சேர்த்து சரியான பததிற்கு கொண்டு வரவும். எண்ணைச் சட்டியில் மசால் வடைக்கு போடுவது போல் தட்டையாக போட்டு பொரித்து எடுத்தால் "4.0 பஜ்ஜி" தயார். குறிப்பு: இந்த கலவையில் தண்ணீரை சேர்க்காமல் பிசைந்து எண்ணையில் உதிர்த்து போட்டால் "பக்கோடா" தயார்.
Comments
Post a Comment
Share your thoughts!