புகைப்படத்தின் கதை:
துருப்பிடிக்காத நினைவுகள்!
மதிப்பெண் சான்றிதழை வாங்குவதற்காக அனைவரும் ஒன்று கூடினோம். தினமும் 'யூனிபார்மில்' பார்த்தவர்களை அன்று 'அன்யூனிபார்மில்' பார்த்தது தனி மகிழ்ச்சி. மாணவிகள் பெரும்பாலானோர் தங்கள் பெற்றோர்களுடனே வந்திருந்தார்கள். வகுப்பு ஆசிரியரிடம் சான்றிதழ்களை வாங்கிவிட்டு, நட்பு வட்டாரத்துடன் பல கதைகளை பேசிக்கொண்டு இருந்தோம். பள்ளியில் இருந்து கல்லூரிக்கு போவதை எண்ணி ஆர்வமும், பள்ளி நண்பர்களை விட்டு பிரியப் போவதை எண்ணி ஏக்கமும் இரண்டறக் கலந்திருந்தது. அனைவரும் அலுவலக கட்டிடத்திற்கு அருகிலும் பள்ளி மைதானத்திலும் இருந்தார்கள்.
சிலர் உடனே வீட்டிற்கு கிளம்பிவிட்டார்கள், பலர் பள்ளியை விட்டு போக மனமில்லாமல் அங்கேயே சுற்றி சுற்றி வந்தனர்.
சிலர் உடனே வீட்டிற்கு கிளம்பிவிட்டார்கள், பலர் பள்ளியை விட்டு போக மனமில்லாமல் அங்கேயே சுற்றி சுற்றி வந்தனர்.
"பார்த்து ரொம்ப நாள் ஆச்சே, நமது வகுப்பறை எப்படி இருக்கிறது?" என யோசித்து தனியாக வகுப்பறையை நோக்கி நடந்தேன். பசங்க ஒருபுறமும் பொண்ணுங்க ஒருபுறமும் ஒதுங்கி நடந்த வரண்டாவில் இன்று என்னைத் தவிர யாரும் இல்லை. வகுப்பறை பூட்டப்பட்டிருந்தது. கடந்து வந்த பாதைக்கு வேலி போட்டது போல இருந்தது. ஆசைப்பட்டாலும் திரும்பி போக முடியாது.
சன்னல் வழியே வகுப்பறையை எட்டிப் பார்த்தேன். ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில், Is this a fish market? என பக்கத்து வகுப்பு ஆங்கில ஆசிரியர் வந்து திட்டும் அளவுக்கு கூச்சல் நிறைந்திருந்த வகுப்பறை இப்பொழுது மயான அமைதியில். அடுத்தக்கட்டமாக எல்லாரும் கல்லூரியில் கூச்சல் போட தயாராகி கொண்டு இருக்கிறார்கள் என்பது இந்த வகுப்பறைக்குத் தெரியுமா?
என்னிடம் அப்போது Nokia Xpress Music கேமிரா போன் இருந்தது. வீட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்து அடம்பிடித்து வாங்கிய போன். என்னுடைய முதல் போன். புகைப்படம் எடுப்பதற்காகவும், முக்கியமாக பாடல்களை கேட்பதற்காகவும் வாங்கினேன். விலை நான்காயிரம். வாங்கி ஒன்றரை வருடம் ஆச்சு. கண்ணில் பட்டதையெல்லாம் புகைப்படமாக எடுத்து தள்ளியிருக்கிறேன். அப்படியாக தற்சமயம் நிசப்தத்தில் இருக்கும் இந்த வகுப்பறையையும் புகைப்படம் எடுக்க வேண்டும் எனத் தோன்றியது. முதலில் அப்படியே வெளியில் இருந்து புகைப்படம் எடுத்தேன். சன்னலின் கம்பிகள் குறுக்கே இருந்ததால் படம் அவ்வளவு சிறப்பாக வரவில்லை. இப்படி படம் எடுப்பதை யாராவது பார்த்து விட்டால் பெரிய பிரச்சினையாகி விடும் என்ற பயமும் ஒரு ஓரமாக இருந்தது. இருந்தும் துணிந்து கையை சன்னலுக்குள் விட்டு முடிந்தவரை வகுப்பறை முழுவதும் தெரிவது போல ஒரு புகைப்படம் எடுத்தேன். அப்ப தான் அந்த சம்பவம் நடைபெற்றது. கையை வெளியே எடுக்கும்போது பதற்றத்தில் கைத்தவறி போன் வகுப்பறைக்குள் விழுந்துவிட்டது.
திருமலை படத்தில் "செல்" முருகன் அவர்கள் விவேக் அவர்களிடம் இறுதியாக சொல்லும் வசனமே அசரீரியாக என் காதுக்குள் ஒலித்தது.
மேசையில் விழுந்து இருந்தாலாவது கையை முடிந்த வரை நீட்டியோ அல்லது குச்சியை வைத்தோ எடுக்க முயற்சி செய்து இருக்கலாம். தரையில் விழுந்து இருக்கிறது. போனை கூட அலுவலகத்தில் கெஞ்சி எப்படியாவது மீட்டு விடலாம், ஆனால் விழுந்த அதிர்ச்சியில் உயிர் பிரிந்து இருந்தால். வீட்டை நினைத்தால் தான் கொஞ்சம் 'டஸ்' ஆகிறது.
அலுவலகம் ஏற்கனவே பரபரப்பாக இருக்கிறது. இதில் நான் போய் இந்த செய்தியை சொன்னால் என்ன நடக்குமோ. அலுவலகத்தை நோக்கி கொஞ்சம் பயத்துடனே நடந்தேன். அலுவலகத்துக்கு வெளியே நின்றிருந்த உதவியாளரிடம் "வகுப்பறையின் சாவி கிடைக்குமா அண்ணா? என் போன் உள்ளே விழுந்து விட்டது" எனக் கேட்டேன்.
"பாபு சார் தான் அதற்கு இன்சார்ஜ், நீ போய் அவர் கிட்ட சொல்லு" எனச் சொன்னார்.
பாபு சார் இயற்பியல் ஆசிரியர். எங்கள் வகுப்பிற்கு வந்ததில்லை, பக்கத்து வகுப்புக்கு அவர்தான் வகுப்பாசிரியர். அவரிடம் பேசியதாக கூட ஞாபகம் இல்லை. மிகவும் கண்டிப்பான ஆசிரியர். எவ்வளவு திட்டினாலும் பரவாயில்லை, ஆனால் அருகில் பொண்ணுங்க மட்டும் அந்த நேரத்தில் இருந்துவிடக்கூடாது என மனதுக்குள் நினைத்துக் கொண்டே அலுவலகத்திற்குள் நுழைந்து அவரை அணுகினேன். மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரிடம் 'வகுப்பறையின் சாவி கிடைக்குமா சார், என்னுடைய போன் உள்ளே விழுந்து விட்டது" என்று சொன்னவுடன் ஆச்சரியப்பட்டு "அப்படியா, எங்கே? வா! காட்டு" என சம்பவ இடத்திற்கு என்னை அழைத்துக்கொண்டு வந்தார்.
உடன் அலுவலக உதவியாளரும் வந்தார்.

நான் சன்னல் வழியா போன் இருக்கும் இடத்தை காட்டினேன். "எப்படி உள்ளே விழுந்துச்சு?" என சந்தேகத்துடன் கேட்டார்.
"வகுப்பறையை கடந்து போகும் கைத்தவறி உள்ளே விழுந்துடுச்சு சார்", இப்படி ஒரு சுமாரான பொய்யை தான் அவருடன் நடந்து வரும் போது யோசித்து வைத்திருந்தேன்.
ஆனது ஆச்சு உண்மையை சொல்லி விடுவோம், நமக்கு போன் தான் முக்கியம்.
"ஒன்னும் இல்ல சார், ஒரு ஞாபகமா இருக்கட்டுமேனு சன்னல் வழியே கைய உள்ள விட்டு கிளாஸ் ரூமை ஒரு போட்டோ எடுத்தேன் சார், அப்ப கைத் தவறி போன் உள்ளே விழுந்துடுச்சு சார்" என்று சொன்னவுடன் என்னை முறைத்து பார்த்தார். எரிச்சலுடன், "கதவை திறந்து போனை எடுத்து கொடுத்திடுங்கனு" உதவியாளரிடம் சொல்லிவிட்டு அவர் வேலையை பார்க்க போய்விட்டார்.
என்ன! 'சீன்' சப்புன்னு முடிச்சுடுச்சு. நான் என்னென்னமோ நடக்கும் என எதிர்பார்த்திருந்தேன். ஒருவேளை அவருக்கு இருக்கும் வேலை பலு காரணமாக இந்த பிரச்சனை எளிதாக முடிவுக்கு வந்துவிட்டது என நினைக்கிறேன். இல்லையென்றால் நேரா H.M. ரூம் தான்.
உதவியாளர், அலுவலகத்தில் இருந்து சாவியை எடுத்து வந்து கதவை திறந்தார். "எனக்கே ஆயிரம் வேலை இருக்கு இதில் உனக்கு கதவ வேற திறந்து விடனுமா" என்று தொனியில் அவரின் உடல் மொழி இருந்தது.
அவர் என்ன வேணும்னாலும் நினைச்சுக்குட்டும், என் ஒரே நோக்கம் போன் தான்.
அவர் என்ன வேணும்னாலும் நினைச்சுக்குட்டும், என் ஒரே நோக்கம் போன் தான்.
மடைத் திறந்து பாயும் நதி அலையாய் அவர் கதவைத் திறந்தவுடன் போன் விழுந்த இடத்தை நோக்கி ஓடினேன். போனை எடுத்தவுடனே உயிர் இருக்கா எனப் பார்த்தேன். சில கீறல்களை தவிர வேற எதுவும் ஆகல. அப்பதான் எனக்கு முழுசா உயிர் வந்தது.
இப்படி பல போராட்டங்களை கடந்து எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போது இந்த கதையும் பல நினைவுகளும் வந்துச் செல்லும்.
அலுவகங்களில் மேசைக்கடியில் வாங்கும் பணத்தை லஞ்சம் எனக் கூறுவார்கள். அதேபோல் தேர்வு நேரங்களில் நண்பர்களிடம் விடைத்தாள்களை பெற்றிருக்கிறோம்.
இன்று சமூக வலைத்தளங்களில் "Motivational Quotes" எழுதும் பெரும்பாலானோர் ஒரு காலத்தில் "Love is Life, Love is Blind, Don't give up, Friends Forever" என வாழ்க்கை தத்துவங்களை மேசையில் 'காம்பஸால்' செதுக்கியவர்களாக கூட இருக்கலாம்.
சிலர் தங்கள் பெயரின் முதல் எழுத்தையும் தங்களுக்குப் பிடித்தமானவர்களுடைய பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து எழுதி, எதையோ சாதித்தது போல தங்களுக்கு உள்ளேயே சிரித்துக் கொள்வார்கள். சிலர் அந்த மேசையில் அமர்ந்து இருக்கும் அனைவருடைய பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து எழுதுவார்கள். குழுவாக இருப்பவர்கள் தங்கள் நட்பு வட்டாரத்திற்கு தாங்களே சூட்டிக் கொண்ட செல்லப் பெயர்களை மேசையில் பொரித்து வைத்து மாஸ் காட்டுவார்கள்.
Evergreen Gangs, Terror Boys, Rock fort Boys, Dons,...

ஆசிரியரின் கற்பித்தல் திறனை, அவர் போன பின்பு மேசையில் தொப்பென்று தூக்கத்தில் விழும் மாணவர்களின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிடலாம். பெரும்பாலும் அது மொழிப் பாடங்களாகவே அமைவது சோகங்கள். அதுவும் மதியானம் முதல் வகுப்பு என்றால், அது எந்த பாடமாக இருந்தாலும் மேசையில் விழும் மாணவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் தான் இருக்கும்.
மண்ணை காற்றில் தூற்றி சாபம் விடுவதை படங்களில் பார்த்திருக்கிறோம். நம்ம பசங்க சாபம் விடும் ஸ்டைலே தனி.
'பேனா, பென்சில், ஹோம்வொர்க் கணக்கு, பரீட்சையில் ஒன் மார்க் ஆன்சர்" எனக் கேட்டது கிடைக்கவில்லை என்றால், "நீ பரீட்சையில் பெயிலா போயிடுவேன்னு" விரலால் நாக்குல எச்சி தொட்டு இரும்புல வெச்சி சாபம் விடுவோம். அந்த சாபத்திற்கு பயந்து, கேட்டதை உடனே ஒத்துக்கொண்டு சாபத்தை வாபஸ் வாங்கச் சொல்லி வற்புறுத்துவார்கள். வாபஸ் பெற, மீண்டும் அதே மாதிரி எச்சி தொட்டு எந்த இடத்தில் வைத்தோமோ அதே இடத்தில் வைத்து வாபஸ், வாபஸ், வாபஸ் என மூன்று முறை சொல்லி வாபஸ் செய்வோம். இரும்பு துருப்பிடிக்க ஆக்சிஜனும் நீரும் தேவை என இயற்பியல் வகுப்பில் படித்து இருக்கிறோம். அப்படி இந்த மேசைகள் துரு பிடித்ததற்கு பல சாபங்கள் காரணமாக இருக்கலாம்.

வீட்டில் தரையில் அமர்ந்து உணவை உண்பவர்களுக்கு ஒரு கனவாக இருக்கும் டைனிங் டேபிள் வகுப்பறையின் மேசைகளே.
முன்னாள் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியை மீண்டும் சென்று பார்க்கும் பொழுது, தாங்கள் அமர்ந்து படித்த அதே மேசையில் மீண்டும் அமர்ந்து பார்ப்பது போல ஒரு நெகிழ்ச்சியான காட்சி இயக்குனர் தங்கர்பச்சான் அவர்களின் "பள்ளிக்கூடம்" திரைப்படத்தில் வரும். அப்படியான ஒரு ஆசை நிச்சயம் அனைவருக்குள்ளேயும் இருக்கும்.
இந்த புகைப்படத்தை பார்த்தவுடன், நாம் எங்கு உட்கார்ந்து இருந்தோம் என்று தேடுவதை விட நமக்கு பிடித்தமானவர்களின் இடத்தை தேடுவதே முதல் நோக்கமாக இருக்கும். அப்படி "அந்த" பிடித்தமானவர்களின் இடங்கள் ஒன்றுக்கும் மேற்பட்டதாகவும் இருக்கலாம், அது அவர் அவர்களுக்கே வெளிச்சம்.
இந்த வகுப்பறையும் மேசையும் இதைப்போல் நூற்றுக்கணக்கான கதைகளை வருடா வருடம் பார்த்திருக்கும்.
இந்த புகைப்படத்தின் நீளம், அகலம், பிக்சல் போன்ற விவரங்களை தொழிநுட்பத்தின் உதவியுடன் தெரிந்துக் கொள்ள முடியும். ஆனால் ஒரு புகைப்படத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் கதையையும் அது தரும் நினைவுகளையும் நம்மால் மட்டுமே சொல்ல முடியும்.
இப்படி நாம் என்றோ எடுத்த ஒரு புகைப்படம் இன்று நமக்கு ஆயிரம் கதைகளை சொல்லும். அப்படி சொல்லவில்லை என்றால் அந்த புகைப்படத்தை உங்கள் காதருகில் வைத்து கவனியுங்கள் நிச்சயம் சொல்லும்.
காலம் வேண்டுமானால் நாம் கடந்து வந்த பாதைக்கு வேலி போடலாம். ஆனால் நாம் சந்திக்கும் புதிய மனிதர்கள், நாம் கேட்கும் பாடல்கள், நாம் பார்க்கும் திரைப்படங்கள், மீம்ஸ்கள், ஏன் ஒரு கடையின் பெயர் பலகை கூட நாம் பொதிந்து வைத்துள்ள நினைவுகளை அசை போட வைக்கும். அதன் மூலம் நாம் கடந்த காலத்திற்கே சென்று வர முடியும்.
பிடித்த தருணத்தை புகைப்படம் எடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அழகிய நினைவுகளை சேகரிப்பது.
பணத்தை போலவே நல்ல நினைவுகளையும் சேகரித்து வைத்தால் எதிர்காலத்தில் பேருதவியாக இருக்கும்.
நினைவுகளை அசை போடுவதென்பது சிறந்த தருணங்களில் ஒன்றாகும்.
வகுப்பறையின் மேசைகள் துரு பிடிக்கலாம், ஆனால் வகுப்பறைகள் தந்த நினைவுகளுக்கு என்றுமே துரு பிடிக்காது.
See also:
புகைப்படத்தின் கதை:
மயக்கம் என்ன!
https://scienceplusmovies.blogspot.com/2018/10/26112011-nokia-express-musiccamera-2-mp.html?m=1
மயக்கம் என்ன!
https://scienceplusmovies.blogspot.com/2018/10/26112011-nokia-express-musiccamera-2-mp.html?m=1
Wonderful narrative vignesh. While reading, I went to those days and able to recollect my memories. Thanks for this writing. My suggestion is Make this writing as your profession may give you Happy and success.
ReplyDeleteஅப்படியே, பள்ளியின் நுழைவாயில் புகைப்படத்தையும் பதிவு செய்து, அதில் உள்ள துவாரங்களின் வழியே நெல்லி, மாங்காய், எலந்தங்கா ஊருகாய்யை இடைவேளை முடிவதற்குள் நான் வாங்கி தருகிறேன் என கூட்டத்தில் போட்ட சண்டைகளும், இடைவேளை முடிந்த பின் வாங்கி அவசர அவசரமாக தின்றுவிட்டு தாமதமாக சென்று வழியில் உடற்பயிற்சி ஆசிரியரிடம் சில உடற்பயிற்சி பெற்ற நினைவுகளையும் பதிவிட்டு இருந்தால் இனிதே நிறைவு பெற்றிருக்கும்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteNice memories or come back
ReplyDelete