"ஊர் சுற்றலாம் வாங்க"
ஸ்ரீ பாலகுருவேல் முருகன் ஆலயம்
சில மாதங்களுக்கு முன் "நல்லவன் பாளையத்தில்" நண்பனின் புதுமணை புகு விழாவிற்கு சென்ற போது இந்த கோயிலை பார்த்தேன்.
திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டு செல்லும் வழியில் 5 கி. மீ. தூரத்தில் இருக்கிறது நல்லவன் பாளையம். அப்படியே அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் சென்றால் வலது பக்கம் சிவப்பு மஞ்சள் நிறத்தில் ஒரு பலகை இருக்கும். அதை ஒட்டியே சென்றால் மரங்களுக்கு நடுவே இந்த கோயிலை காணலாம்.
இந்த கோயில் சின்ன குன்றின் மேல் அமைந்துள்ளது. படிகளுக்கு இரண்டு புறமும் வேப்ப மரம் உட்பட பல மரங்கள் இருப்பதால் சில்லென்று இருக்கிறது. மொத்தம் 51 படிகள். வலது புறத்தில் தனியாக நவகிரக சன்னதி இருக்கிறது.
மேலே சின்ன மண்டபமும் சன்னதியும் இருக்கிறது.
கோயிலை பற்றி வேறு எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
பகலிலேயே சற்று திகிலாக இருந்தது.
அமைதியான, வித்தியாசமான இடத்தை விரும்புவர்கள் தாராளமாக ஒரு முறை சென்று வரலாம்.
#tiruvannamalai #nallavanpaalayam

Comments
Post a Comment
Share your thoughts!