திருவண்ணாமலை மக்கள் கவணத்திற்கு!!
மதியம் சுமார் 3 மணி இருக்கும்.
வீட்டின் கதவைத் தட்டுகிறார் ஒருவர்.
அவருக்கு வயது 40 இருக்கும்.
காக்கி சட்டை பேண்ட் அணிந்து இருக்கிறார்.
வீட்டில் ஒரு பெண் மட்டும் இருக்கிறார், என்ன வேண்டும்? என்று கேட்கிறார்.
செப்டிக் டேங்க் பைப்யின் துவாரத்தை கொசு வலை கொண்டு மூடிவதற்காக நகராட்சியில் இருந்து அனுப்பி வைத்தார்கள் என கறாரான தோணியில் சொல்லிக்கொண்டே வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய முயற்ச்சிக்கிறார்.
வீட்டில் இருந்த பெண்மணியும் அவரை மாடிக்கு அழைத்து சென்று பைப் இருக்கும் இடத்தை காட்டுகிறார்.
அவரும் கொசு வலையை கட்டிவிட்டு கீழே வந்தவுடன் தலையை சொறிந்துக்கொண்டே கொஞ்சம் டீ காசு தாமா என கேட்கிறார்.
இவரும் உள்ளே சென்று 20₹ எடுத்து வந்து தருகிறார்
அவரும் சென்று விடுகிறார்.
கொஞ்சம் நேரம் கழித்து தனது Android போனை தேடியுள்ளார் அந்த பெண்.
Charge போட்டது நினைவிற்கு வந்தது.
Charge போட்ட இடத்தில் போய் பார்க்கும் போது அதிர்ந்து போனார். charger மட்டுமே இருந்தது போனை காணவில்லை.
அப்போது தான் அவருக்கு அனைத்தும் புரிந்தது.
இவர் உள்ளே காசு எடுக்க சென்ற நேரத்தில் ஹாலில் charge ஏறிக்கொண்டு இருந்த போனை வந்தவர் எடுத்துக்கொண்டார் என்பது.
இந்த சம்பவம் நான்கு நாட்களுக்கு முன்பு எங்கள் குடியிருப்புக்கு அருகில் நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தை கேள்வி படும் போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் இதே போல் ஒரு சம்பவம் என் சிறு வயதிலும் நடந்திருக்கிறது.
அப்போது நான் தனியாக வீட்டில் இருந்தேன். வீட்டை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு இருந்தேன். அதே போல் ஒருவர் நகராட்சியில் இருந்து வருகிறேன் கொசு வலை கட்டனும் கதவை திற என மிரட்டிம் தோணியில் சொன்னார்.
உண்மையிலேயே எங்கள் வீட்டில் செப்டிக் டேங்க் பைப்யை ஏற்கனவே கொசு வலையால் மூடிவிட்டோம்.
இதை அவரிடம் சொன்னபோது நம்பவில்லை.
இல்லை நான் கண்ணால் பார்த்த பிறகே நம்புவேன் இது நகராட்சியின் உத்தரவு, கதை திற என சொன்னார். எங்கள் வீட்டின் செப்டிக் டேங்க் பைப் தெருவில் இருந்து பார்த்தாலே தெரியும். அதனால் நான் தெருவுக்கு வந்து கொசு வலை கட்டியுள்ளதை காட்டினேன்.
அவர் சென்றுவிட்டார்.
சுமார் 15 வருடங்களுக்கு முன் எனக்கு நடந்த இந்த சம்பவம் இன்றும் தொடர்கிறது என நினைக்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.
நகராட்சியில் இருந்து டெங்கு கொசு ஒழிப்பு பணி செய்ய மட்டுமே இப்போது பெண் ஊழியர்கள் வருகிறார்கள்.
மற்றபடி வேற யாரும் வருவதில்லை.
அப்படி உங்கள் வீட்டிற்கும் கொசு வலை கட்ட வேண்டும் என நபர்கள் வந்தால்
"நாங்கள் வலை கட்டிவிட்டோம்" என கூறுங்கள்.
அதையும் மீறி நாங்கள் கண்ணால் பார்த்து உறுதிபடுத்த வேண்டும் அல்லது இது நகராட்சியின் உத்தரவு என மிரட்டும் தோணியில் சொன்னால்.
"அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் புகார் வேண்டுமானால் கூட கொடுத்துக் கொள்ளுங்கள் என நீங்கள் அவர்களை மிரட்டுங்கள்".
கவணமாக இருப்போம்!
விழிப்புடன் இருப்போம்!!
16/12/2018
Comments
Post a Comment
Share your thoughts!