கனவுகளின் விளக்கம்
- சிக்மண்ட் பிராய்ட்
1) கனவு என்றால் என்ன?
2) ஏன் தூக்கத்தில் கனவு வருகிறது?
3) ஏன் விழித்தவுடன் கனவு மறந்து போகிறது?
4) கனவு பலிக்குமா?
5) கனவு என்பது கடவுளின் அருள் வாக்கா?
6) கனவில் எதிர்காலத்தை தெரிந்துக்கொள்ள முடியுமா?
7) பகல் கனவு என்றால் என்ன?
8) காதல் வயப்பட்டவர்களின் கனவில், அவர்கள் காதலிப்பவர்கள் வருவார்களா?
9) பாலுணர்ச்சி சம்பந்தமான கனவுகள் வருவது ஏன்?
மேலும் இதுபோன்று கனவை பற்றிய கேள்விகளுக்கு இந்த புத்தகம் எளிமையாக விளக்கம் தருகிறது.
அதுநாள்வரை கனவு என்பது மதம் அல்லது அசரீரி என்ற கோணத்திலே நம்பப்பட்டு வந்தது. அதற்கு விளக்கம் தரும் வகையில் "உளவியலின் தந்தை" என்று போற்றப்படும் மருத்துவரான 'சிக்மண்ட் பிராய்ட்' அவர்கள் 1899ல் வெளியிட்ட புத்தகம் தான் "The Interpretation of Dreams". அதன் தமிழ் சுருக்க வடிவமே இந்த "கனவுகளின் விளக்கம்".
'சிக்மன்ட் பிராய்ட்' அவர்கள் ஒரு நபரின் கனவை பதிவு செய்து, அந்த நபரின் கடந்த காலம், விருப்பு, வெறுப்பு என அனைத்தையும் அலசி ஆராய்ந்து அந்தக் கனவுக்கான விளக்கத்தை தருகிறார்.
இவ்வாறு அவர் பலதரப்பட்ட மக்களின் கனவுகளை பதிவு செய்து, அதில் இருக்கும் ஒற்றுமைகளை கண்டுபிடித்ததன் மூலமாக கனவுகளுக்கு சில கோட்பாடுகளை வகுக்கிறார்.
இதற்காக அவர் எடுத்துக்கொண்ட கனவுகள் பெரும்பாலும் அவரை சந்திக்க வந்த மனநோயாளிகளின் கனவுகளே ஆகும். அந்தக் கோட்பாடுகள் இயல்புநிலை மனிதர்களுக்கும் பொருந்துவது ஆச்சரியமளிக்கிறது.
கனவு என்றுமே பொய் சொல்லாது, கனவிற்கு ஒரு யானையின் ஞாபக சக்தியை விட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும் என்ற செய்திகள் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தருகிறது. கனவே விழித்தவுடன் மறந்து போகிறது. அப்படி இருக்கையில் கனவிற்கு எப்படி யானையை விட ஆயிரம் மடங்கு அதிகமாக ஞாபகசக்தி இருக்கும் என்ற கேள்வி நிச்சயம் எழும்.
இது போன்ற கேள்விகளுக்கு,
அவர் சான்றுடன் தரும் விளக்கங்கள் மேலும் ஆச்சரியத்தை தருகிறது.
இந்த புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் நம் கனவுகளை நாமே ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு வித்தகராகவும் மாறிவிடலாம். அப்படி நான் இந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் நாட்களில் கண்ட ஒரு கனவை பற்றி பார்ப்போம்
கனவு:
ஒரு சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு வெள்ளை chartல் ஒன்றுபட்ட தமிழ் நாட்டு மாநிலத்தின் வரைபடம் கருப்பு நிறத்தில் வரையப்பட்டி இருந்தது.
அதில் திருச்சி இருக்கும் இடத்தில் வேறு ஏதோ ஒரு பெயர் இருந்ததாக நினைவு.
விளக்கம்:
கனவுக்கு முந்தன நாள் YouTubeல் scroll செய்துகொண்டு இருக்கும் போது ஒரு காணொளியின் Thumbnailல் இந்தியாவில் Covid19 நோயால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் infographicயை பார்த்ததாக ஞாபகம்.
எனக்கு வெள்ளைத்தாளில் நீல நிற மை பேனாவால் எழுதுவதைவிட கருப்பு நிற மை பேனாவால் எழுதுவதே பிடிக்கும்.
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஒருநாள் தமிழ் ஆசிரியர் திருச்சியின் முந்தைய பெயர் "திருசிலாபள்ளி". அதுவே இப்போது திருச்சிராப்பள்ளி என்று மருவியதாக சொன்னார்.
இப்படி நாம் மற்றவர்களின் கனவையும் ஆராய்ந்து பார்க்கலாம். ஆனால் அதற்கு அவர்கள் உண்மையை சொன்னால் மட்டுமே முழுமையான விளக்கத்தை சொல்ல முடியும்.
சில கனவுகள் அர்தமற்றதாகவும் குறியீட்டுடன் வரும். அதற்கான விளக்கத்தையும் 'சிக்மண்ட் பிராய்ட்' தெளிவாக தருகிறார். அதில் சில முரண்பாடுகளும் விதிவிலக்கும் இருக்கிறது என தற்போது அறிவியலாளர்கள் கூறுகின்றனர். மனநோயாளிகளின் கனவுகளில் மூலம் வரையறுத்த முடிவுகளை இயல்புநிலை மனிதர்களுக்கு எப்படி ஒப்பிடுவது என சிலர் இவரின் கோட்பாடுகளை ஏற்க மறுத்தனர்.
"எல்லா கனவுகளுக்கு பாலுணர்வே காரணம்" என்ற கோட்பாட்டையும் அறிவியலாளர்கள் மறுக்கின்றனர்.
இப்படி சில முரண்பாடுகள் இருந்தாலும் கனவை பற்றிய ஆராய்ச்சிக்கு தொடக்க புள்ளியாக அமைந்தது இந்த புத்தகமே.
இந்த புத்தகத்தை பகுதி பகுதியாக இடைவேளை விட்டு படித்தால் விரைவில் முடித்து விடலாம், புத்தகத்தையும் முழுமையாக புரிந்துகொள்ள முடியும். காரணம் இந்த புத்தகம் ஒரு உளவியல் புத்தகத்தை படிப்பது போன்று இருப்பதால்.
ஒவ்வொரு முறையும் படித்த பின்பு புத்தகத்தை மூடி வைக்கும்போது "என்ன நான் சொல்வது சரிதானே?", அப்படின்னு அட்டையில் இருக்கும் 'சிக்மண்ட் பிராய்ட்' அவர்கள் நம்மைப் பார்த்து கேட்பது போல் இருக்கிறது.
கனவு என்பது எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்காது, சில நேரங்களில் ஏடாகூடமான கனவுகளும் வரும். அப்படி பாலுணர்வு, நிர்வாணம், காமம் போன்ற கனவுகளை 'சிக்மண்ட் பிராய்ட்' அவர்கள் உயிரியல் ரீதியாக சிறப்பாக விளக்குகிறார். நிச்சயம் பதின் வயது குழந்தைகள் முதல் அனைவரும் படிக்கும் வகையில் இருக்கிறது இந்த புத்தகம். அப்படி இருக்கையில் இந்த புத்தகத்தை 'Books for Children' என்ற வரிசையில் வெளியிடப்பட்டுள்ளது யோசிக்க வைக்கிறது.
இப்படி ஒரு சிறப்பான புத்தகத்தை தமிழில் கொடுத்ததற்காக 'பாரதி புத்தகாலயதையும்' மொழிபெயர்ப்பாளர் 'நாகூர் ரூமி' அவர்களையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
மனிதனின் எண்ணங்களை அவர்கள் காணும் கனவு கண்ணாடி போல காட்டி விடும்.
Dream is the fulfillment of a wish.
- Sigmund Freud
See also:
Story of the Photo - School Memories
https://scienceplusmovies.blogspot.com/2020/04/school-memories.html?m=1

Comments
Post a Comment
Share your thoughts!