புகைப்படத்தின் கதை:
மயக்கம் என்ன!
இடம்: பாலசுப்ரமணியர் திரையரங்கம், திருவண்ணாமலை
நாள்: 26/11/2011
அப்போது தான் Nokia Express Music(Camera - 2 MP) வாங்கியிருந்தேன். எனது முதல் Cellphone.
பார்க்கும் பலவற்றை புகைப்படமாக எடுத்துதள்ளினேன். Selfie என்ற பெயர் அப்போது எல்லாம் அறிமுகம் இல்லை. ஏகப்பட்ட selfieகளை எடுத்து தள்ளினேன்.
B.Sc., முதல் வருடம் படித்துக்கொண்டு இருந்தேன்.
"மயக்கம் என்ன" திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தில் இடம்பெறும் "காதல் என் காதல்" பாடல் மிகவும் பிரபலம். படத்தை பார்க்க முடிவு செய்தேன்.
முதல் பாதி காதல், நகைச்சுவை காட்சிகள் என சுவாரசியமாக சென்றது.
இரண்டாம் பாதி திரையரங்கில் இருந்த பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
எனக்கும் பிடிக்கவில்லை.
இறுதியில் அந்த விருது வழங்கும் காட்சி முடிவதற்கு முன்பே பலரும் தங்கள் இருக்கைகளை விட்டு வாசல் கதவை நோக்கி நகர்ந்தனர். படத்தின் ஆப்ரேட்டர் லைட்யை போட்டுவிட்டார். பாதி திரையரங்கம் காலி.
இங்கே பதிவிட்டுயிக்கும் காட்சி வரும்போது, இதை புகைப்படம் எடுக்க வேண்டும் என எனக்கு தோன்றியது.
A film by Selvaragavan வந்தது, படம் முடிந்தது என ஆப்ரேட்டரால் முடிவு செய்யப்பட்டு விட்டது.
சில வருடங்களுக்கு பிறகு செல்வராகவன் அவர்களின் நேர்காணலை பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. புதுயுகம் "மதன் மூவி மேட்னி" நேர்காணல் என நினைக்கிறேன்.
"படத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பிறகு கார்த்திக் சுவாமிநாதன் thanks சொல்வதை பற்றி விவாதித்தனர்".
படத்தில் அப்படி ஏதும் காட்சி இல்லையே. நான் குழப்பம் அடைந்தேன்!
சில மாதங்களுக்கு பிறகு நண்பனின் laptopல் இந்த படம் இருந்ததை பார்த்த நான், இறுதி காட்சியை பார்த்தேன்.
Rolling title வந்த பிறகு அந்த "thanks" காட்சியை கண்டேன்.
உலகின் மிகச்சிறந்த பழிவாங்கல் காட்சி என்றும் அழைக்கலாம்.
சினிமா மீதான பார்வை, வாசிப்பின் மூலமாக விரிவடைந்தது. அதற்கு முக்கிய காரணம் வார பத்திரிகைகள் மற்றும் "இந்து தமிழ் செய்திதாளின் இந்து டாக்கீஸ்".
"மயக்கம் என்ன" திரைப்படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் பலவற்றை கற்றுக் கொள்கிறேன்.
அன்று "மயக்கம் என்ன" திரைப்படம், பிடிக்கவில்லை, இன்று என்னுடைய சிறந்த தமிழ் சினிமா பட்டியலில் இடம் பெற்றுவிட்டது.
மயக்கம் என்ன - follow your heart!
#mayakamenna #tiruvannamalai
#sbscinemas
See also:
FDFS of Enthiran Movie
https://scienceplusmovies.blogspot.com/2020/04/fdfs-of-enthiran-movie.html?m=1
Comments
Post a Comment
Share your thoughts!