"அடிஅண்ணாமலை லெமன் டீ"
பொதுவாக அனைத்து டீ கடைகளிலும் ஒரு குவளை சுடு தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஏதோவொரு தூள் கலந்து தருவார்கள். ஆனால் இங்கு அப்படியல்ல. ஒரு குவளை சூடான டீ தண்ணீரில் எலுமிச்சை சாறு பிழிந்து, உண்மையான 'லெமன் டீ' தருகிறார் திருவண்ணாமலை பகுதியில் அடிஅண்ணாமலையில் டீ கடை நடத்திவரும் திரு. காளிதாஸ். இந்த லெமன் டீயின் சுவை நாவை தான்டி பற்களிலும் சிறிது நேரம் ஒட்டிக்கொண்டு இருக்கும். விலை ரூபாய் 10. மேலும் 'இஞ்சி டீ', 'புதினா டீ' என்று வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ப தருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலையில் இக்கடையில் போடப்படும் 'ஒரு ரூபாய் மசால் வடை' மிகவும் பிரபலம்.
இக்கடையின் சுவரில் அழகான ஓவியங்கள் மாட்டப்பட்டு இருக்கிறது. இவையனைத்தும் காளிதாஸின் சகோதரர் திரு. கண்ணதாசன் கைவண்ணத்தில் உருவானவையே. கண்ணதாசன் பகுதி நேரமாக ஓவியராகவும் ஆசிரமங்களில் சேவை புரிந்தும் வருகிறார். கோயில், ரமணர் மற்றும் பல ஓவியங்களை வரைந்து கொடுக்கும் இவர், தற்போது வரைந்து முடித்திருக்கும் 'விஷ்ணு ஆன்டாள் திருக்கல்யாணம்' ஓவியம் மலேசியா செல்கிறது. ஆம் இக்கடைக்கு வெளிநாட்டினர் பலர் தங்களுக்கு விருப்பமான ஓவியத்தை வரைய சொல்லி பெற்று செல்கின்றனர்.
மொத்தத்தில் "லெமன் டீ - வித்தியாசமான சுவை, ஓவியங்கள் - வித்தியாசமான அனுபவம்".

Comments
Post a Comment
Share your thoughts!