"புன்னகை அரசன் பானிபூரி கடை"
சேட்டு என்கிற ராமச்சந்திரன், திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில், இடுக்கு பிள்ளையார் கோயில் அருகே பானிபூரி கடை நடத்திவருகிறார். இந்த கடையின் சகலமும் அவரே. எந்திரன் போல செயல்படுகிறார். பானிபூரி - ஒரு தட்டின் விலை ரூபாய் 3. இது 2003ல் அவர் கடை ஆரம்பிக்கும் போது இருந்த விலை. இப்பொழுது ரூபாய் 20. பள்ளி படிப்பின் போது பானிபூரி கடையில் உதவியாளராக இருந்திருக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் பொருளாதார சூழ்நிலை காரணமாக பல்வேறு வேலைகள் செய்து, பின் 2003ல் இருந்து இந்த கடையை நடத்தி வருகிறார். "புன்னகை அரசன்" - இந்த பட்டத்திற்கு பொருத்தமானவர் என்பது இவரை பார்த்தால் புரியும். ஆம் இந்த கடைக்கென எந்த பெயரும் இல்லை. நான் சூட்டிய பெயரே "புன்னகை அரசன் பானிபூரி கடை". தினமும் மாலை 4 முதல் 9 மணி வரை திறந்திருக்கும். சில நாட்களில் சீக்கிரமே தீர்ந்துவிடும். ஞாயிறு விடுமுறை. பகலில் கடைக்கு தேவையானவற்றை தயாரித்து கொள்கிறார். சொந்த பயன்பாட்டுக்காக ஆட்டோ ஒன்றை வைத்துள்ளார். பானிபூரிக்கு இரண்டு ரசம் பூரி தரும் இவரின் சிறப்பு தனித்துவமான ருசி, மென்மையான வார்த்தை, அழகான புன்னகை போன்றவையே. மொத்தத்தில் சேட்டு என்கிற புன்னகை அரசன் பானிபூரி - "மகிழ்ச்சி"

Comments
Post a Comment
Share your thoughts!