"ஊர் சுற்றலாம் வாங்க"
அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,
சோமாசிபாடி, திருவண்ணாமலை.
திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இக்கோயில்.
திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி வழியாக செல்லும் அனைத்து தனியார் பேருந்திலும் செல்லலாம். சோமாசிபாடிக்கு அடுத்த நிறுந்தமான "சோமாசிபாடி கோயில் மேடு" என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இடதுபுறமாக இருக்கும் சாலையில் சற்று நடந்தால் இக்கோயிலை அடையலாம்.
இக்கோயிலுக்குச் செல்ல இரண்டு காரணங்கள்:
1) சிறு வயதில் ஒரே ஒருமுறை மட்டுமே சென்றிருக்கிறேன்.
2) சமீபத்தில் தமிழ்நாடு அறநிலையத்துறை சார்பாக இக்கோயிலில் அன்னதானம் தொடங்கப்பட்டது என செய்தித்தாளில் பார்த்தது.
திருவண்ணாமலை பெரியார் பேருந்து நிறுத்தத்திற்கு 11 மணிக்கு சென்றேன். 45 நிமிடத்திற்கு பிறகு பேருந்து கிடைத்தது. மதிய வேளையில் இந்த பகுதிக்கு பேருந்து கிடைப்பது சிரமம். இக்கோயிலை அடையும் போது மணி 12:10.
கோயிலுக்கு சென்று வெளியே வந்தவுடன் "அன்னதான டோக்கன் வாங்கிக் கொள்ளுங்கள்" என்று ஒருவர் டோக்கனை கொடுத்தார். கொஞ்சம் நேரம் காத்திருங்கள் என்று சொன்னார். பலர் அன்னதானக் கூடத்தின் வாயிலில் உட்கார்ந்து இருந்தனர். காத்திருந்த நேரத்தில் கோயிலை சுற்றி சில புகைப்படங்கள் எடுத்தேன். 12:30 கோயிலின் நடை சாத்தப்பட்டது. அன்னதானக் கூடத்தின் கதவு திறக்கப்பட்டது.
கோஸ் பொரியல், புடலங்காய் கூட்டு, சோறு, முள்ளங்கி கேரட் சாம்பார், ரசம், மோர், மாங்காய் ஊறுகாய்.
நிறைவான அன்னதானம்.
இக்கோயில் ஆடிக் கிருத்திகை, தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் திருவிழாவைப் போல் சிறப்பாக இருக்கும்.
#tiruvannamalai #somasipaadi
Comments
Post a Comment
Share your thoughts!