"இரவில் சுவையான கோதுமை ரவை கிச்சடி இங்கு கிடைக்கும்"
அண்ணாமலையார் நம்ம வீட்டு உணவகம்.
காலையில் 9 மணி முதல் 2 மணி வரை பல வகையான கலவை சாதங்கள் கிடைக்கிறது.
அதில் வெஜ் சாதம், புதினா சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் தனித்துவமான சுவையுடன் பிரமாதமாக இருக்கிறது.
மற்ற சாதங்களும் அருமையாக இருக்கிறது. புளி சாதம் மட்டும் சற்று காரமாக இருக்கிறது.
மாலையில் வெஜ் போளி வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கிறது. பனியாரம், தேங்காய் போளி, பருப்பு போளி போன்றவைகளும் அருமையாக இருக்கிறது.
ராகி அடை மிகவும் மெல்லியதாகவும் மிருதுவாகவும் கொஞ்சம் காரமாக இருக்கிறது.
இரவு உணவு வகைகளில் அனைத்துமே அருமையாக இருக்கிறது.
குறிப்பாக "கோதுமை ரவை கிச்சடி". இரவு வேளையில் சர்க்கரை உள்ளவர்களுக்கு உணவகங்களில் பெரும்பாலும் சப்பாத்தியை தவிர வேறு தேர்வு இருக்காது. அதற்காகவே இங்கு இருக்கும் சிறந்த, சுவையான தேர்வுதான் இந்த "கோதுமை ரவை கிச்சடி" விலை ₹30.
இங்கே சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கிறது. சோலா பூரி, அதிகமானோர் வாங்கி செல்கின்றனர். இதுவும் நன்றாகவே இருக்கிறது.
"பெப்பர் இட்லி" - பொடியாக்கிய இட்லியை நெய், மிளகு, சீரகத்தில் தாளித்துள்ளனர்.
இதனை சாப்பிடும் போது நெய்யின் வாசனை, மிளகின் காரம் இரண்டும் கலந்து வித்தியாசமான சுவையுடன் அருமையாக இருக்கிறது. நெய் தோசையை விட பெப்பர் இட்லியில் நெய் சற்று தூக்கலாகவே இருக்கிறது.
சாதா தோசை (ரோஸ்ட்) அளவில் பெரிதாக இருக்கிறது, விலை ₹25 மட்டுமே. மற்ற தோசை வகைகளும் நன்றாகவே இருக்கிறது.
தொட்டுக்கொள்ள தரப்படும் சாம்பார் அருமை,
"மலாட்டை சட்னி" - அடுத்த கட்டம்(Vera Level), மிகவும் ருசியாக இருக்கிறது.
வடகறி - ஒரு கப் 10 ரூபாய், இதுவம் பிரமாதம்.
கலவை சாதம் மட்டும் 9 மணியில் இருந்தே கிடைக்கும்.
மற்ற உணவு வகைகளின் விலை மற்றும் கிடைக்கும் நேரம் இந்த பதிவுடன் இருக்கும் உணவகத்தின் விலை பட்டியலின் புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மொத்தத்தில் இந்த உணவகம் - "தரம்".
அண்ணாமலையார் நம்ம வீட்டு உணவகம்,
அண்ணாமலை திருமண மஹால் எதிரில் (A2B எதிரில்),
வேங்கிக்கால்,
திருவண்ணாமலை.
("ஞாயிறு விடுமுறை")
#tiruvannamalai #hotelsintiruvannamalai #hotelsinvengikkal

Comments
Post a Comment
Share your thoughts!