"நடிகையர் திலகம்" திரை விமர்சனம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 1950க்கு பின் கொடி கட்டி பறந்த நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று பதிவே "நடிகையர் திலகம்".
கதைச் சுருக்கம்:
தற்போது செல்வத்தை இழந்து உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார் சாவித்திரி. அவரை பற்றி கட்டுரை எழுதும் வாய்ப்பு பத்திரிகையாளர் மதுரவாணிக்கு (சமந்தா) கிடைக்கிறது. புகைப்பட கலைஞர் விஜய் ஆண்டனியுடன் (விஜய் தேவாரகொண்டா) கட்டுரை எழுத சென்ற இடத்தில் சந்திக்கும் மனிதர்கள் மூலம் சாவித்திரியின் கதை பயணிக்கிறது.
சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் வாழ்ந்து இருக்கிறார். இளம் வயது சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் செய்யும் சேட்டைகளும் பாவனைகளும் ஆச்சிரியபட வைக்கிறது. குறிப்பாக அவரின் புன்னகை. கீர்த்தி சுரேஷ் சாவித்திரி என்றொரு ஆளுமையாகவே திரையில் வளம் வருகிறார்.
முடியாததை சவாலாக நினைத்து முடிப்பது, தன்னிடம் பணம் இல்லாவிட்டால் பிறருக்கு உதவி செய்வது என சாவித்திரியின் குணங்கள் நம்மை ஆச்சிரிய பட வைக்கிறது. புகழுக்கு காரணமாக இருந்த இந்த குணங்களே பின்னாளில் அவரின் வீழ்ச்சிக்கு வழி செய்வது கசப்பு.
ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் ஹீரோ வில்லன் என இரு பரிமாணத்திலும் நடித்திருக்கிறார்.
மேலும் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
சாவித்திரி தன் கணவரின் துக்கத்தை பகிர்ந்துகொள்ளும் காட்சி நெஞ்சை பதற வைக்கிறது.
வரலாற்றை மீள் உருவாக்கம் செய்வதில் கலை, ஆடை, ஒப்பணை போன்ற துறைகள் சிறப்பாகவே இருக்கிறது.
சில இடங்களில் இருக்கும் ஒட்டாத உதட்டசைவு மற்றும் மேம்போக்கான படத்தொகுப்பு போன்றவற்றை தவிர்த்து இருக்கலாம்.
பாடல்களில் "மகாநதி" பாடல் மீண்டும் கேட்டவும் பார்க்கவும் தூண்டுகிறது. மகாநதி... என பாடலில் ஒலிக்கும் போது "மாஸ்".
பிண்ணனி இசை அருமை.
சில இடங்களில் பொறுமையாக சென்றாலும், படம் முடிந்து வெளியே வரும் போது தாராளமாக மூன்று மணிநேரமும் 120 ரூபாயும் செலவு செய்து பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.
சாவித்திரி அவர்களின் வாழ்க்கையில் இருக்கும் ஏற்ற இறக்கத்தை ஒரு படமாக மட்டுமல்லாமல் ஒரு அனுபவ பாடமாக படைத்தறதற்கு இயக்குனருக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!

Comments
Post a Comment
Share your thoughts!