சின்ன வயதுப் புகைப்படம் - புத்தகம் விமர்சனம்
(Chinna Vayathu Pugaippadam - Book Review)
ஏப்ரல் 21 திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் "கலை இலக்கிய இரவு" நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கே அமைக்கப்பட்டு இருந்த புத்தக நிலையத்தில் வாங்கிய புத்தகம்தான் "சின்ன வயதுப் புகைப்படம்".
பொதுவாக ஒரு நல்ல புத்தகத்தை வாங்க, புத்தகத்தின் பின் பக்க அட்டையை பார்க்க வேண்டும். அதில் எந்த வகையான புத்தகம் அல்லது ஆசிரியரின் சிறு முன்னுரை இருக்கும். மேலும் தயக்கம் இருந்தால் புத்தகத்தின் தொடக்கத்தில் இருக்கும் பதிப்புரையை படித்தால் ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்.
அப்படி இந்த புத்தகத்தின் பின் பக்க அட்டையை பார்க்கும் பொழுது ஓர் ஆச்சிரியம். இந்த புத்தகத்தை எழுதியவர் திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ப. பவுன்குமார். அக்கணமே வாங்கிவிட வேண்டும் என்று முடிவானது.
இது ஒரு "ஹைக்கூ கவிதை" புத்தகம். 150 ஹைக்கூ கவிதைகள் இருக்கின்றன. மொத்தம் 64 பக்கங்கள், ₹60. வாசிக்க அதிகபட்சம் அரைமணி நேரம் இருந்தால் போதுமானது. கவிதைகள் பெரும்பாலும் பழைய நினைவுகளை தொட்டு பார்க்கும் வகையில் இருக்கின்றது. மேலும் பவுன் குமார் அவர்கள் விவசாயம், மண்வாசனை, சமூகப் பிரச்சினை, சுற்றுச்சூழல் போன்றவற்றையும் எளிமையாக படைத்திருக்கிறார்.
"கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தேன்
நிலா இல்லை
நீருமில்லை"
"முதுகில் பட்டது
மூச்சுக் காற்று
நெரிசல்"
"மரத்தடியில் படிப்பு
குருகுலக் கல்வியல்ல
கட்டடம் பற்றாக்குறை"
இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள நிழல் படங்களும் கவிதையாகவே தெரிகிறது.
பக்கத்துக்கு ஒரு முறையாவது சிறு புன்னகை அல்லது அழகான நினைவுகள் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை. நன்றி கவிஞர் ப. பவுன்குமார்.
வெளியீடு:
"நறுமுகை"
29/35, தேசூர்பாட்டை, செஞ்சி,
விழுப்புரம் - 604202.
அலைபேசி: 9486150013
ஏப்ரல் 23, உலக புத்தக தினம்.

Comments
Post a Comment
Share your thoughts!