"Popcorn Uncle"
இதுநாள் வரை நாம் சாப்பிட்ட சோளப் பொரியில்(பாப்கார்ன்) ஏதேனும் ஒரு குறையாவது கண்டிப்பாக இருக்கும்.
1) சோளம் சரியாக வெடிக்காமல் இருக்கும் அல்லது அதிகமாக வெடித்து இருக்கும்.
2) மசாலா இல்லாமல் இருக்கும் அல்லது அதிகமாக இருக்கும்
3) மேற்கூறிய இரண்டும் சரியாக இருந்தால் கண்டிப்பாக விலை அதிகமாக இருக்கும்.
ஆனால் 10 ரூபாய்க்கு மிகவும் சுவையான பாப்கார்னை தருகிறார் திருவண்ணாமலை திருவூடல் தெருவில் காய்கறி சந்தைக்கு எதிரில் 15 வருடங்களாக பாப்கார்ன் கடை நடத்திவரும் திரு. பாண்டியன் அவர்கள். திருவண்ணாமலையில் ஆரம்பித்த முதல் பாப்கார்ன் கடையாகும். கடை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை 5 முதல் 8 மணி வரை இருக்கும். மற்ற நாட்களில் புகைப்பட கலைஞராக இருக்கிறார். இவரது புகைப்பட ஸ்டுடியோவே திருவண்ணாமலையில் ஆரம்பிக்கப்பட்ட மூன்றாவது ஸ்டுடியோ. பாப்கார்னில் பயன்படுத்தபடும் மசாலாவை இயற்கையான பொருட்களை கொண்டு வீட்டிலேயே தயாரித்துக் கொள்கிறார். இதுவே இவரது பாப்கார்னின் சிறப்பு. இவரது கடைக்கு அனைத்து வயதினரும் வாடிக்கையாளராக இருந்தது வருகின்றனர்.
இவரின் நோக்கம் "குழந்தைகளின் விலைமதிப்பற்ற புன்னகையே முதல் வருமானம்" என்பதே.
வழியில் எங்காவது இவரை பார்த்தால் குழந்தைகள் அழைக்கும் பெயரே "Popcorn Uncle".

Comments
Post a Comment
Share your thoughts!