இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே தெருக்களில் "அகலு! அகலேய்....!" என வியாபாரிகளின் கூக்குரல், கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி விட்டத்தை சொல்லும் அறிகுறிகளின் ஒன்று. பத்து நாட்கள் நடைபெறும் எங்கள் ஊர் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் மரத்தேரும், பத்தாம் நாள் தீபத் திருவிழாவும் மிகவும் பிரபலம். ஐந்தாம் திருவிழாவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும். முதல் திருவிழாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக திருவிழா கலைக் கட்ட ஆரம்பிக்கும். மரத்தேரின் போது திருவிழா அதன் உச்ச நிலையை தொட்டு இருக்கும். உள்ளூரில் இருந்து வெளியூர்களுக்கு சென்றவர்கள் தங்கள் சொந்த வீட்டிற்கும் அல்லது சொந்தங்களின் வீட்டிற்கு வந்து சேர்ந்திருப்பார்கள். ஒன்பதாம் திருவிழாவன்று பல ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதற்கான சிறப்பு பேருந்துகளை இயக்க ஆரம்பித்து இருப்பார்கள். விடுமுறை கிடைக்காத திருவண்ணாமலை வாசிகள் எப்படியாவது தீபத்தை மட்டுமாவது பார்த்து விடவேண்டும் என அடித்து பிடித்து ஊரை நோக்கி தங்களின் பயணத்தை தொடங்கி இருப்பார்கள். தொலைக்காட்சியில் எல்லா சேனலில்கள...