Skip to main content

Posts

குவளைகளின் மாநாடு

அதென்னவோ தெரியல தீடிர்னு ஊர்ல எல்லா பக்கமும் வெயில் காலத்துல தர்பீஸ் கடைகள் முளைக்கிற மாதிரி எல்லாப் பகுதியிலும் தேநீர் கடைகள் முளைத்து வருகிறது. இவையெல்லாம் பாரம்பரியமான (பித்தளை கொதிநீர் கலன்) கடைகளாக அல்லாமல் ஒரு பெரிய நிறுவனத்தின் கிளைக் கடைக்களாக இருக்கிறது. Tea Time, Tea Boy, Tea House, Tea Bench, Cup Tea, Master Tea, கருப்பட்டி காபி, தந்தூரி டீ, சித்தரா காபி பார் எனப் பல நிறுவனங்கள் எல்லா ஊர்களிலும் தங்கள் கிளைகளை​ பரப்பி வருகிறது. அந்த நிறுவனங்களின் கடையை யார் வேண்டுமானாலும் தனியாகவோ கூட்டாகவோ முன் தொகை கட்டி franchise அடிப்படையில் எடுத்து நடத்தலாம். தொழில் முனைவோர் பலருக்கு இந்த தொழில் நல்லாதொரு வாய்ப்பாக அமைகிறது.  தேநீரை அமர்ந்து பருக மேசை நாற்காலிகள், வித்தியாசமான தேநீர் வகைகள், பல வகையான தின்பண்டங்கள், குளிர் ஆகாரங்கள், செல்பி எடுப்பதற்கு ஏற்றவாறு பளிச்சென்று இருக்கும் கடையின் தோற்றம் எனப் பாரம்பரிய கடைகளுடன் ஒப்பிடுகையில் பல சிறப்பம்சங்களை இந்த புதிய தேநீர் கடைக்கள் பெற்றுள்ளது. அதே சமயம் சில நிறுவனங்களின் தேநீர் அந்த அளவுக்கு ருசியாக இல்லையே என தோன்றவும் வைக்கிறது. ச...
Recent posts

பொஹிமியன் - புத்தக விமர்சனம்

சினிமா சார்ந்து யூட்யூப் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களில் இயங்கி வரும் 'மிஸ்டு மூவிஸ்' குழுவிடமிருந்து வந்துள்ள இரண்டாவது புத்தகம் இந்த "பொஹிமியன்". மற்ற மொழி படங்களின் அறிமுகமாக மட்டுமல்லாமல் சினிமாவின் கருத்தியல் மற்றும் கலை கோட்பாட்டையும் சேர்த்து  'ஐடியாலஜி' என்ற பெயரில் யூட்யூபில் பதிவிட்டு வந்தார்கள். அது சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தது.  மேலும் சினிமா மீதான பார்வையை பலக் கோணங்களில் விரிவடையச் செய்தது. ரசிகர்கள் அடுத்த பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கும்போது அந்த பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. அதற்கு முக்கிய காரணம் 'காப்பிரைட்' பிரச்சினை என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது.  அப்படி மிஸ்டு மூவிஸின் 'ஐடியாலிஜி' பதிவுகளை காண ஆர்வமுடன் காத்திருப்பவர்களுக்கு எழுத்து வடிவில் கட்டுரைத் தொகுப்பாக இந்த புத்தகத்தை படைந்திருக்கிறார் அக்குழுவில் ஒருவாரான அப்துல் ரஹ்மான். "மிஸ்டு மூவிஸ் ஆதரவாளர்களுக்கு நன்றி" என ஆரம்ப பக்கத்தில் பார்த்த போது "நானும் சார்பட்டா பரம்பரை தான்"னு நினைத்துக்கொண்டு கட்டுரையின் தலைப்புகளை...

Tiruvannamalai Museum

  அரசு அருங்காட்சியகம், ஆண்டாள் சிங்காரவேலு திருமணம் மண்டபத்திற்கு அருகில், நீல்கிரீஸ் அங்காடிக்கு பின்புறம், பழைய கலெக்டர் பங்களா, வேங்கிக்கால், திருவண்ணாமலை. Google Map: Government Museum, Vengikkal, Tiruvannamalai, Tamil Nadu 606604. https://maps.app.goo.gl/Nq4GFaFtyqf1PbM89

மொட்டை மாடி தீபாவளி!

  இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே தெருக்களில் "அகலு! அகலேய்....!" என  வியாபாரிகளின் கூக்குரல், கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி விட்டத்தை சொல்லும் அறிகுறிகளின் ஒன்று. பத்து நாட்கள் நடைபெறும் எங்கள் ஊர் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் மரத்தேரும், பத்தாம் நாள் தீபத் திருவிழாவும் மிகவும் பிரபலம். ஐந்தாம் திருவிழாவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும். முதல் திருவிழாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக திருவிழா கலைக் கட்ட ஆரம்பிக்கும். மரத்தேரின் போது திருவிழா அதன் உச்ச நிலையை​ தொட்டு இருக்கும். உள்ளூரில் இருந்து வெளியூர்களுக்கு சென்றவர்கள் தங்கள் சொந்த வீட்டிற்கும் அல்லது சொந்தங்களின் வீட்டிற்கு வந்து சேர்ந்திருப்பார்கள். ஒன்பதாம் திருவிழாவன்று பல ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதற்கான சிறப்பு பேருந்துகளை இயக்க ஆரம்பித்து இருப்பார்கள். விடுமுறை கிடைக்காத திருவண்ணாமலை வாசிகள் எப்படியாவது தீபத்தை மட்டுமாவது பார்த்து விடவேண்டும் என அடித்து பிடித்து ஊரை நோக்கி தங்களின் பயணத்தை தொடங்கி இருப்பார்கள். தொலைக்காட்சியில் எல்லா சேனலில்கள...

வனமகனுக்கு காடோடி பரிசு!

நண்பர்களுக்கு திருமண பரிசாக எப்பொழுதும் புத்தகங்களை தருவதே வழக்கம். "எஸ்.ரா." அவர்களின் "காட்சிகளுக்கு அப்பால்" புத்தகத்தை மட்டும் பரிசாக பத்து நண்பர்களுக்கு மேல் கொடுத்து இருப்பேன். காரணம் அந்த புத்தகம் உலக சினிமாக்களை பற்றியது. சினிமா எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று, அதேபோல் எளிமையான புத்தகமும் கூட. இதனால் எளிதில் அனைவரும் வாசிக்க முயற்சி செய்வார்கள். அந்த புத்தகத்தின் சில பிரதிகளை புத்தக கண்காட்சிக்கு போகும்போதெல்லாம் வாங்கி வைத்துக் கொள்வேன். விலையும் பக்கங்களும் நூற்றுக்கு குறைவுதான்.  மற்ற எந்த பொருளை பரிசாக கொடுப்பதை காட்டிலும் புத்தங்களை தருவதில் ஒரு திருப்தி ஏற்படுகிறது. புத்தகங்களை பெற்றவர்கள் உடனே படிக்கவில்லை என்றாலும் அவர்கள் வீட்டிலேயே பத்திரமாக இருக்கும். இடத்தை அடைக்காது. பின்நாளில் அவர்களோ அல்லது வேறு யாராவதோ கூட வாசிக்கலாம். வாசிப்பு உலகத்திற்கு​ ஒரு புதிய வாசகர் கிடைப்பார். 29.10.2020 அன்று (நாளை) பள்ளி நண்பன் அரவிந்தின் திருமணம்​. மிக நெருக்கம் இல்லையென்றாலும் நீண்ட நாள் நண்பன். தமிழக வனத்துறையில் பணிபுரிகிறார். கையிருப்பில் இருக்கும் "காட்சி...

Naveram - Short Story.

நவிரம் - சிறுகதை.       சீரான இடைவெளியில் மண்ணில் பாதி புதைந்திருந்த ரப்பர் டயர்களின் மீது மழலைகள் தாவியாடிக் கொண்டிருந்தார்கள். தொங்கும் கயிறு பாலம், மரப்பாலம், லாரி டயரினால் செய்யப்பட்ட குகை என பல வித்தியாசமான விளையாட்டுகளும்; ஊஞ்சல், சறுக்கு மரம், இரும்புக் கூண்டு, சீ-சா போன்ற வழக்கமான விளையாட்டுகளும் இருந்தது. பல வண்ணங்களில் தீட்டப்பட்டு இருந்த அனைத்து விளையாட்டுகளிலும், குழந்தைகள் ஆக்கிரமிப்பு செய்து இருந்தார்கள். அவர்களை தங்களின் கண் பார்வையிலேயே இருக்கும்படி பெற்றோர்கள் அருகிலேயே நின்று கவனித்துக் கொண்டார்கள். மழைநீர் சேகரிப்பு, மக்கும்-மக்காத குப்பை, டெங்கு ஒழிப்பு, நடைப் பயிற்சியின் பயன்கள், மனிதன் நிலவில் கால் பதித்த காட்சி, சூரியக் குடும்பம், கிரகணங்கள், மயில் வடிவில் இருக்கும் மாவட்டத்தின் வரைபடம் என பலப் படங்கள் பூங்காவின் சுற்று சுவர் முழுவதும் ஓவியமாக வரையப்பட்டு இருந்தது. ஆங்காங்கே போடப்பட்டு இருந்த சிமெண்ட் பெஞ்ச் அனைத்திலும் ஆட்கள் நிரம்பி இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பிள்ளைகளுடன் வந்தவர்களாகவும் சிலர் வேடிக்கை பார்த்து பொழுதை போக்க வந்தவர்களாக...

POV - DIY Equipment for Mobile Phone

POV Bookshelf Tour: https://youtu.be/QL7as4WSp5I   Maruthanaayakam Khanshaib - POV Short Film: https://youtu.be/X9yG8VvxMJM Required Things: A Cap, Velcro stricker, Selfie stick, Metal String.