"இரவில் சுவையான கோதுமை ரவை கிச்சடி இங்கு கிடைக்கும்" அண்ணாமலையார் நம்ம வீட்டு உணவகம். காலையில் 9 மணி முதல் 2 மணி வரை பல வகையான கலவை சாதங்கள் கிடைக்கிறது. அதில் வெஜ் சாதம், புதினா சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் தனித்துவமான சுவையுடன் பிரமாதமாக இருக்கிறது. மற்ற சாதங்களும் அருமையாக இருக்கிறது. புளி சாதம் மட்டும் சற்று காரமாக இருக்கிறது. மாலையில் வெஜ் போளி வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கிறது. பனியாரம், தேங்காய் போளி, பருப்பு போளி போன்றவைகளும் அருமையாக இருக்கிறது. ராகி அடை மிகவும் மெல்லியதாகவும் மிருதுவாகவும் கொஞ்சம் காரமாக இருக்கிறது. இரவு உணவு வகைகளில் அனைத்துமே அருமையாக இருக்கிறது. குறிப்பாக "கோதுமை ரவை கிச்சடி". இரவு வேளையில் சர்க்கரை உள்ளவர்களுக்கு உணவகங்களில் பெரும்பாலும் சப்பாத்தியை தவிர வேறு தேர்வு இருக்காது. அதற்காகவே இங்கு இருக்கும் சிறந்த, சுவையான தேர்வுதான் இந்த "கோதுமை ரவை கிச்சடி" விலை ₹30. இங்கே சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கிறது. சோலா பூரி, அதிகமானோர் வாங்கி செல்கின்றனர். இதுவும் நன்றாகவே இருக்கிறது. "பெப்பர் இட...