Art Films Vs Commercial Films ஒரு கதை படமாக உருவாகும் போது பல காரணிகள் அக்கதை எந்த மாதிரி படமாக வர வேண்டும் என தீர்மானிக்க படுகிறது. வியாபாரம், லாபம் - முக்கியமான காரணிகள். இவைகள் தேவை தான் ஆனால் இவைகளே படத்தின் தன்மையை மாற்றி விடுகிறது. Commercial படங்கள் வியாபாரத்திற்கு உதவுகிறது, லாபம் கிடைக்கும் என "நம்பப்படுகிறது". சில முறைகள் மட்டுமே அந்த நம்பிக்கை நிஜமாக மாறியிருக்கிறது. Art படங்கள் எடுத்தால் Award மட்டுமே கிடைக்கும், Reward (வசூல்) கிடைக்காது என ஒரு பேச்சு இருக்கிறது. இதற்கு விதிவிலக்காக வந்த படம் "காக்கா முட்டை". Award & Reward இரண்டும் கிடைத்தது. ஆனால் "காக்கா முட்டை" வெளிவந்து மூன்று மாதங்கள் கழித்து வெளியான "குற்றம் கடிதல்" படத்திற்கு Award மட்டுமே கிடைத்தது. சமீபத்தில் "மேற்கு தொடர்ச்சி மலை & பரியேறும் பெருமாள்" என இரண்டு தரமான படங்கள் வந்தது. நான் உறுதியாக கூறுகிறேன் "மேற்கு தொடர்ச்சி மலை" படத்தை திரையரங்கில் பார்த்தவர்களை விட "பரியேறும் பெருமாள்" படத்தை திரையரங்கில் பார்த்தவ...