Skip to main content

Posts

Showing posts from January, 2018

Real Lemon Tea with Art Gallery

"அடிஅண்ணாமலை லெமன் டீ" பொதுவாக அனைத்து டீ கடைகளிலும் ஒரு குவளை சுடு தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஏதோவொரு தூள் கலந்து தருவார்கள். ஆனால் இங்கு அப்படியல்ல. ஒரு குவளை சூடான டீ தண்ணீரில் எலுமிச்சை சாறு பிழிந்து, உண்மையான 'லெமன்  டீ' தருகிறார் திருவண்ணாமலை பகுதியில் அடிஅண்ணாமலையில் டீ கடை நடத்திவரும்  திரு. காளிதாஸ். இந்த லெமன் டீயின் சுவை நாவை தான்டி பற்களிலும் சிறிது நேரம் ஒட்டிக்கொண்டு இருக்கும். விலை ரூபாய் 10. மேலும் 'இஞ்சி டீ', 'புதினா டீ' என்று வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ப தருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலையில் இக்கடையில் போடப்படும் 'ஒரு ரூபாய் மசால் வடை' மிகவும் பிரபலம். இக்கடையின்  சுவரில் அழகான ஓவியங்கள் மாட்டப்பட்டு இருக்கிறது. இவையனைத்தும் காளிதாஸின் சகோதரர் திரு. கண்ணதாசன் கைவண்ணத்தில் உருவானவையே. கண்ணதாசன் பகுதி நேரமாக ஓவியராகவும் ஆசிரமங்களில் சேவை புரிந்தும் வருகிறார். கோயில், ரமணர் மற்றும் பல ஓவியங்களை வரைந்து கொடுக்கும் இவர், தற்போது வரைந்து முடித்திருக்கும் 'விஷ்ணு ஆன்டாள் திருக்கல்யாணம்' ஓவியம் மலேசியா செல்கிறது. ஆம் இக்க...

Sci-fic & Techno Tamizh Movies

Mr. Smile Panipuri Shop - Tiruvannamalai

"புன்னகை அரசன் பானிபூரி கடை" சேட்டு என்கிற ராமச்சந்திரன், திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில், இடுக்கு பிள்ளையார் கோயில் அருகே பானிபூரி கடை நடத்திவருகிறார். இந்த கடையின் சகலமும் அவரே. எந்திரன் போல செயல்படுகிறார். பானிபூரி - ஒரு தட்டின் விலை ரூபாய் 3. இது 2003ல் அவர் கடை ஆரம்பிக்கும் போது இருந்த விலை. இப்பொழுது ரூபாய் 20. பள்ளி படிப்பின் போது பானிபூரி கடையில் உதவியாளராக இருந்திருக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் பொருளாதார சூழ்நிலை காரணமாக பல்வேறு​ வேலைகள் செய்து, பின் 2003ல் இருந்து இந்த கடையை நடத்தி​ வருகிறார். "புன்னகை அரசன்" -  இந்த பட்டத்திற்கு பொருத்தமானவர் என்பது இவரை பார்த்தால் புரியும். ஆம் இந்த கடைக்கென  எந்த பெயரும் இல்லை. நான் சூட்டிய பெயரே  "புன்னகை அரசன் பானிபூரி கடை". தினமும் மாலை 4 முதல் 9 மணி வரை திறந்திருக்கும். சில நாட்களில் சீக்கிரமே தீர்ந்துவிடும்​. ஞாயிறு விடுமுறை. பகலில் கடைக்கு தேவையானவற்றை தயாரித்து கொள்கிறார். சொந்த பயன்பாட்டுக்காக ஆட்டோ ஒன்றை வைத்துள்ளார். பானிபூரிக்கு இரண்டு ரசம் பூரி தரும் இவரின் சிறப்பு  தனித்துவமான...