Skip to main content

Posts

Showing posts from 2022

குவளைகளின் மாநாடு

அதென்னவோ தெரியல தீடிர்னு ஊர்ல எல்லா பக்கமும் வெயில் காலத்துல தர்பீஸ் கடைகள் முளைக்கிற மாதிரி எல்லாப் பகுதியிலும் தேநீர் கடைகள் முளைத்து வருகிறது. இவையெல்லாம் பாரம்பரியமான (பித்தளை கொதிநீர் கலன்) கடைகளாக அல்லாமல் ஒரு பெரிய நிறுவனத்தின் கிளைக் கடைக்களாக இருக்கிறது. Tea Time, Tea Boy, Tea House, Tea Bench, Cup Tea, Master Tea, கருப்பட்டி காபி, தந்தூரி டீ, சித்தரா காபி பார் எனப் பல நிறுவனங்கள் எல்லா ஊர்களிலும் தங்கள் கிளைகளை​ பரப்பி வருகிறது. அந்த நிறுவனங்களின் கடையை யார் வேண்டுமானாலும் தனியாகவோ கூட்டாகவோ முன் தொகை கட்டி franchise அடிப்படையில் எடுத்து நடத்தலாம். தொழில் முனைவோர் பலருக்கு இந்த தொழில் நல்லாதொரு வாய்ப்பாக அமைகிறது.  தேநீரை அமர்ந்து பருக மேசை நாற்காலிகள், வித்தியாசமான தேநீர் வகைகள், பல வகையான தின்பண்டங்கள், குளிர் ஆகாரங்கள், செல்பி எடுப்பதற்கு ஏற்றவாறு பளிச்சென்று இருக்கும் கடையின் தோற்றம் எனப் பாரம்பரிய கடைகளுடன் ஒப்பிடுகையில் பல சிறப்பம்சங்களை இந்த புதிய தேநீர் கடைக்கள் பெற்றுள்ளது. அதே சமயம் சில நிறுவனங்களின் தேநீர் அந்த அளவுக்கு ருசியாக இல்லையே என தோன்றவும் வைக்கிறது. ச...