சினிமா சார்ந்து யூட்யூப் மற்றும் சமூக வலைத்தள பக்கங்களில் இயங்கி வரும் 'மிஸ்டு மூவிஸ்' குழுவிடமிருந்து வந்துள்ள இரண்டாவது புத்தகம் இந்த "பொஹிமியன்". மற்ற மொழி படங்களின் அறிமுகமாக மட்டுமல்லாமல் சினிமாவின் கருத்தியல் மற்றும் கலை கோட்பாட்டையும் சேர்த்து 'ஐடியாலஜி' என்ற பெயரில் யூட்யூபில் பதிவிட்டு வந்தார்கள். அது சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தது. மேலும் சினிமா மீதான பார்வையை பலக் கோணங்களில் விரிவடையச் செய்தது. ரசிகர்கள் அடுத்த பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கும்போது அந்த பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. அதற்கு முக்கிய காரணம் 'காப்பிரைட்' பிரச்சினை என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது. அப்படி மிஸ்டு மூவிஸின் 'ஐடியாலிஜி' பதிவுகளை காண ஆர்வமுடன் காத்திருப்பவர்களுக்கு எழுத்து வடிவில் கட்டுரைத் தொகுப்பாக இந்த புத்தகத்தை படைந்திருக்கிறார் அக்குழுவில் ஒருவாரான அப்துல் ரஹ்மான். "மிஸ்டு மூவிஸ் ஆதரவாளர்களுக்கு நன்றி" என ஆரம்ப பக்கத்தில் பார்த்த போது "நானும் சார்பட்டா பரம்பரை தான்"னு நினைத்துக்கொண்டு கட்டுரையின் தலைப்புகளை...