நண்பர்களுக்கு திருமண பரிசாக எப்பொழுதும் புத்தகங்களை தருவதே வழக்கம். "எஸ்.ரா." அவர்களின் "காட்சிகளுக்கு அப்பால்" புத்தகத்தை மட்டும் பரிசாக பத்து நண்பர்களுக்கு மேல் கொடுத்து இருப்பேன். காரணம் அந்த புத்தகம் உலக சினிமாக்களை பற்றியது. சினிமா எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று, அதேபோல் எளிமையான புத்தகமும் கூட. இதனால் எளிதில் அனைவரும் வாசிக்க முயற்சி செய்வார்கள். அந்த புத்தகத்தின் சில பிரதிகளை புத்தக கண்காட்சிக்கு போகும்போதெல்லாம் வாங்கி வைத்துக் கொள்வேன். விலையும் பக்கங்களும் நூற்றுக்கு குறைவுதான். மற்ற எந்த பொருளை பரிசாக கொடுப்பதை காட்டிலும் புத்தங்களை தருவதில் ஒரு திருப்தி ஏற்படுகிறது. புத்தகங்களை பெற்றவர்கள் உடனே படிக்கவில்லை என்றாலும் அவர்கள் வீட்டிலேயே பத்திரமாக இருக்கும். இடத்தை அடைக்காது. பின்நாளில் அவர்களோ அல்லது வேறு யாராவதோ கூட வாசிக்கலாம். வாசிப்பு உலகத்திற்கு ஒரு புதிய வாசகர் கிடைப்பார். 29.10.2020 அன்று (நாளை) பள்ளி நண்பன் அரவிந்தின் திருமணம். மிக நெருக்கம் இல்லையென்றாலும் நீண்ட நாள் நண்பன். தமிழக வனத்துறையில் பணிபுரிகிறார். கையிருப்பில் இருக்கும் "காட்சி...