கனவுகளின் விளக்கம் - சிக்மண்ட் பிராய்ட் 1) கனவு என்றால் என்ன? 2) ஏன் தூக்கத்தில் கனவு வருகிறது? 3) ஏன் விழித்தவுடன் கனவு மறந்து போகிறது? 4) கனவு பலிக்குமா? 5) கனவு என்பது கடவுளின் அருள் வாக்கா? 6) கனவில் எதிர்காலத்தை தெரிந்துக்கொள்ள முடியுமா? 7) பகல் கனவு என்றால் என்ன? 8) காதல் வயப்பட்டவர்களின் கனவில், அவர்கள் காதலிப்பவர்கள் வருவார்களா? 9) பாலுணர்ச்சி சம்பந்தமான கனவுகள் வருவது ஏன்? மேலும் இதுபோன்று கனவை பற்றிய கேள்விகளுக்கு இந்த புத்தகம் எளிமையாக விளக்கம் தருகிறது. அதுநாள்வரை கனவு என்பது மதம் அல்லது அசரீரி என்ற கோணத்திலே நம்பப்பட்டு வந்தது. அதற்கு விளக்கம் தரும் வகையில் "உளவியலின் தந்தை" என்று போற்றப்படும் மருத்துவரான 'சிக்மண்ட் பிராய்ட்' அவர்கள் 1899ல் வெளியிட்ட புத்தகம் தான் "The Interpretation of Dreams". அதன் தமிழ் சுருக்க வடிவமே இந்த "கனவுகளின் விளக்கம்". 'சிக்மன்ட் பிராய்ட்' அவர்கள் ஒரு நபரின் கனவை பதிவு செய்து, அந்த நபரின் கடந்த காலம், விருப்பு, வெறுப்பு என அனைத்தையும் அலசி ஆராய்ந்து அந்தக் கனவுக்கான விளக்கத்தை...