Skip to main content

Posts

Showing posts from May, 2019

வஞ்சிக்கப்படும் சிறு முதலீட்டு திரைப்படங்கள்

ஊரெங்கும் சுவரொட்டியும் இருக்கிறது. முன்பதிவு செய்யும் செயலிலும்(App) காட்சி இருக்கிறது. சரி என்று திரையரங்கிற்கு சென்றால் அந்த காட்சி வேறொரு படத்திற்கு சென்றுவிடுகிறது. காரணம்: சிறிய முதலீட்டு படங்களை பார்க்க மக்கள் வரவில்லை. பெரிய முதலீட்டு படங்களை பார்க்க அதிகமானோர் வருவதால். "டுலட்" காட்சியை "ஒரு அதார் லவ்" படத்திற்கு கொடுத்தார்கள், "மெஹந்தி சர்க்கஸ்" காட்சியை " காஞ்சனா 3" படத்திற்கு கொடுத்தார்கள். இன்று "மான்ஸ்டர்" காட்சியை "Mr. Local" படத்திற்கு கொடுத்துவிட்டார்கள். இப்படிக்கு வித்தியாசமான திரைப்படங்களை "திரையரங்கில்" பார்க்க காத்துக்கொண்டு இருக்கும் ஒரு சினிமா ரசிகன்.

Interesting Foods from Cinema