கூட்டாஞ்சோறு சமையல் (The Tiny Foods - YouTube Channel) நாம் அனைவரும் சிறு வயதில் பொங்கி சாப்பிட்ட கூட்டாஞ்சோறு போல, இன்று சைவம் அசைவம் என அனைத்து உணவு வகைகளையும் செய்து YouTubeல் "The Tiny Foods" என்ற சேனலில் பதிவேற்றம் செய்து அசத்துகிறார்கள் திருவண்ணாமலையில் வசிக்கும் வளர்மதி ராம்குமார் தம்பதியினர். நம் சமையல் அறையில் எப்படி சமைக்கிறமோ அதே முறையில் கலைநயமாக வயல்வெளியில் சிறு சிறு மண் பாண்டங்களை கொண்டும், இருப்பதிலேயே சிறிய உணவு பொருட்களை பயன்படுத்தியும் சமைக்கிறார்கள். பார்க்க வேடிக்கையாக இருக்கும் அதே சமயத்தில் இவர்களின் மெனக்கெடலும் நன்றாக இருக்கும். இந்தியாவின் முதல் Outdoor Tiny Food Cooking என்ற சிறப்பு பெற்ற இவர்களின் சேனல் இன்று ஒரு லட்சத்திற்கும் மேல் சந்தாதாரர்கள் (Subscribers) உள்ளனர். மொத்தத்தில் "The Tiny Foods" மீண்டும் மலரும்(வீசும்) கூட்டாஞ்சோறு நினைவு(வாசம்).