ரேணுகாம்பாள் கோயில், படவேடு. திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் பேருந்தில் ஏறி "சந்தவாசல்" நிறுத்தத்தில் இறங்க வேண்டும். பயண நேரம் - ஒரு மணி நேரம். அங்கிருந்து பங்கு ஆட்டோ (share auto) மூலம் கோயிலை அடையலாம். பயண நேரம் - 15 நிமிடங்கள். படவேட்டில் ரேணுகாம்பாள் கோயிலை தவிர பல கோயில்கள் இருக்கிறது. Car அல்லது Bikeல் செல்பவர்கள் முக்கியமான அனைத்து கோயில்களையும் எளிதில் பார்த்து விடலாம். பேருந்தில் சென்றவர்கள் ரேணுகாம்பாள் கோயிலை பார்த்து விட்டு, கோயிலுக்கு அருகில் இருக்கும் ஆட்டோவை வாடகைக்கு எடுப்பது சிறந்த வழியாகும். அனைத்து கோயில்களையும் பார்க்க தோராயமாக இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் ஆகும். படவேட்டை சுற்றிப்பார்க்க சிறந்த நேரம்: காலை - 8 மணி முதல் 12 மணி வரை மாலை - 3 மணி முதல் 6.30 வரை விசாரித்த வகையில் நான் பார்க்கத் தவர விட்ட முக்கியமான இடங்கள்: 1) லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். 2) அம...