புகைப்படத்தின் கதை: மயக்கம் என்ன! இடம்: பாலசுப்ரமணியர் திரையரங்கம், திருவண்ணாமலை நாள்: 26/11/2011 அப்போது தான் Nokia Express Music(Camera - 2 MP) வாங்கியிருந்தேன். எனது முதல் Cellphone. பார்க்கும் பலவற்றை புகைப்படமாக எடுத்துதள்ளினேன். Selfie என்ற பெயர் அப்போது எல்லாம் அறிமுகம் இல்லை. ஏகப்பட்ட selfieகளை எடுத்து தள்ளினேன். B.Sc., முதல் வருடம் படித்துக்கொண்டு இருந்தேன். "மயக்கம் என்ன" திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தில் இடம்பெறும் "காதல் என் காதல்" பாடல் மிகவும் பிரபலம். படத்தை பார்க்க முடிவு செய்தேன். முதல் பாதி காதல், நகைச்சுவை காட்சிகள் என சுவாரசியமாக சென்றது. இரண்டாம் பாதி திரையரங்கில் இருந்த பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. எனக்கும் பிடிக்கவில்லை. இறுதியில் அந்த விருது வழங்கும் காட்சி முடிவதற்கு முன்பே பலரும் தங்கள் இருக்கைகளை விட்டு வாசல் கதவை நோக்கி நகர்ந்தனர். படத்தின் ஆப்ரேட்டர் லைட்யை போட்டுவிட்டார். பாதி திரையரங்கம் காலி. இங்கே பதிவிட்டுயிக்கும் காட்சி வரும்போது, இதை புகைப்படம் எடுக்க வேண்டும் என எனக்கு தோன்றியது. ...