நிகழ் காலத்தில் களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்களை காவல் துறையினர் என்கவுண்டர் செய்கின்றனர். அதைத்தொடர்ந்து நீதிபதி மூலம் விசாரணை நடத்தப்படுகிறது. கதை 1980 மற்றும் நிகழ்காலத்திற்கும் மாறி மாறி பயனிக்கிறது. களத்தூர் கிராமத்தில் நடந்த சம்பவங்களின் விசாரணையில் தொடங்கி நீதிபதியின் தீர்ப்பில் முடிகிறது இத்திரைப்படம். களத்தூர் கிராம மக்கள் களவு தொழில் செய்து வாழ்கின்றனர். அதனால் காவல்துறை ஊருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. கிடா திறுக்கன் என்னும் மனிதனின் வாழ்வில் நடைபெறும் நட்பு, ஊர் பற்று, காதல், துரோகம், பிள்ளை பாசம் போன்றவற்றை அழகாக காட்சி படுத்தியுள்ளானர். பாத்திர தேர்வு யதார்த்தமாக உள்ளது. கிஷோர் கிடா திறுக்னாக வாழ்ந்திருக்கிறார். மு ஐதல் பாதி சுமாரான படத்தை பார்பதை போன்ற உணர்வை தந்தாலும், இரண்டாம் பாதி மிகவும் அற்புதமாக உள்ளது. குறிப்பாக கடைசி அரைமணி நேரம் சிறப்பு. பிண்ணனி இசை அருமை. வித்தியாசமான கதையை விரும்புவோர் தாராளமாக ஒருமுறை களத்தூர் கிராமத்திற்கு சென்று வரலாம்.